அம்மை நோய் வகைகள் படங்கள்- Ammai Disease

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் வகைகள் படங்கள்

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் வந்துள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.

அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது.

இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

சின்னம்மை மற்றும் அக்கி அம்மை வராமல் தடுத்துக்கொள்ள, இப்போது தடுப்பூசி உள்ளது. ‘சின்னம்மை தடுப்பூசி’ (Chicken pox vaccine) என்று அதற்குப் பெயர்.

குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும்.

வீட்டில், அடுத்த வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டதென்றால், அவருக்கு நோய் தொடங்கிய மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகுகிற மற்றவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

அம்மை நோய் அறிகுறிகள்

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் அறிகுறிகள் முதலில் சாதாரணத் தடுமக் காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும்.

இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும்.

உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும்.

மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அ

டுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.

சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும்.

முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.

வழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும்.

அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும்.

அம்மை நோய் பரவும் விதம்

அம்மை நோய் குணமாக

அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. 

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் குணமாக

‘ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும். அத்துடன் ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அம்மைக் கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.

வேப்பிலை என்பது ஆன்டி-செப்டிக் பண்பு நிறைந்தது. எனவேதான் அதை பாதிக்கப்பட்டவர்களின் படுக்கைக்கு கீழ் வைப்பது , வீட்டை சுற்றிலும் கட்டுவது என செய்வார்கள். முக்கியமாக வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதற்குக் காரணம் மற்றவர்கள் அவர்கள் வீட்டிற்குள் வந்துவிடக் கூடாது. வீட்டில் அவர்களுக்கு அம்மை நோய் உள்ளது என்பதை உணர்த்துவதுதான். 

அம்மை நோய் குறைய

அம்மை நோய் குணமாக

வேப்பிலை ஒரு இருபது எடுத்து அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாகச் சுண்டும்வரை கொதிக்க வைத்து இறக்கி, நன்றாக ஆற வைத்து, காபி டம்ளரில் 1/2 டம்ளர் சாறு அம்மை வந்தவருக்குக் கொடுக்கவேண்டும். ஒரு நாளைக்கு, காலை மாலை இருவேளைகள் கொடுக்க அம்மை நோய் விரைவில் குணமாகும்.

வெதுவெதுப்பான உப்புநீரைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளை வாயைக் கொப்பளிக்கலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். சுத்தமான பருத்தித் துணியாலான துவாலையைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடலைத் துடைத்துக் கொள்ளலாம்.

அம்மை நோய் நன்மைகள்

அம்மை நோய் குணமாக

ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.

அம்மை நோய் வந்தால் என்ன செய்வது?

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் தாக்கியவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம். நோய் துவங்கிய உடன் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர்,  கஞ்சி சாப்பிடலாம். பழச்சாறு கள், பால் குடிப்பதும் நல்லது.

அம்மை நோய் தாக்கத்தின் போது ஏற்படும் காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளாக சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்புதான் எடுக்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள்,  ஆரஞ்சு பழச்சாறுகள் அருந்தலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும். இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். 

அம்மை நோய் எத்தனை நாள் இருக்கும்?

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் அதிகபட்சமாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 

இதையும் படிக்கலாமே

முகப்பளிச்சிட  மிக எளிமையான வழிகள் -முகம் பளிச்சென்று இருக்க -Mugam Palapalakka Tips

தழும்பு குணமாக- Thalumbu Maraiya Cream-Mederma Cream Uses in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top