மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் பறந்தோடும் இந்த கற்றாழை செடியால் – Aloe Vera Benefits in Tamil

Aloe Vera Benefits in Tamil

Aloe Vera Benefits in Tamil – வீடுகளில் வளர்க்கப்படும் கற்றாழையானது ஒரு அழகு செடி மட்டும் அல்ல. மருத்துவ குணம் நிறைந்த செடியாகும்.கரியபோளம், கரிய பவளம், காசுக்கட்டி என பல பெயர்களைக் கொண்டது இந்த கற்றாழை.

கற்றாழை வகைகள் – Aloe Vera Benefits in Tamil

 Aloe Vera Benefits in Tamil

கற்றாழையில் பல வகைகள் உள்ளன. அவை, சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை ஆகியவை ஆகும். கற்றாழையின் உள்ளே காணப்படும் திரவ பகுதியானது சருமத்தை மெழுகுட்டுகிறது. கற்றாழையின் மருத்துவ குணத்தைக் காணலாம்.

கற்றாழையின் பயன்கள்…

Aloe Vera Benefits in Tamil
 • சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
 • உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.
 • உடல் எடையைக் குறைக்கும்.
 • மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.
 • மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
 • உடல் உஷ்ணம் குறையும்.
 • வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
 • முடியை நன்றாக வளரச் செய்யும்.
 • ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.
 • வயிற்றுவலியானது குணமாகும்.
 • தழும்புகள் குணமாகும்.
 • வெண்படைகள் குணமாகும்.
 • மூலநோயானது குணமாகும்.
 • செரிமான பிரச்சனை குணமாகும்.
 • தோல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
 • பொடுகை போக்கும்.
 • வாய் சார்ந்த நோய்களைக் குணப்படுத்துகிறது.
 • மூட்டு வலியைக் குணமாக்கும்.
 • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
 • நெஞ்செரிச்சலைக் குணமாக்கும்.

கற்றாழையின் நன்மைகள்…

Aloe Vera Benefits in Tamil

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக கழுவிக்கொள்ளவும். அத்துடன், இஞ்சி, தேன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி விட்டு தண்ணீர் கலந்து குடிக்கவும். இதனை குடித்து வந்தால், உடல் எடையானது குறையும். மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். உடலானது குளிர்ச்சியாகும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.மேலும், இந்த ஜீஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

கற்றாழை ஜெல்லின் மீது படிகாரத் தூளைத் தூவி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்தததும், அந்த ஜெல்லில் இருந்து நீரானது பிரிந்துவிடும். அந்நீருடன் வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகு சேர்த்து சாப்பிடலாம். சிறுநீரக சம்பந்தமான பிரச்சனை குணமாகும்.

கற்றாழை ஜெல்லின் மீது படிகாரத் தூளைத் தூவி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்தததும், அந்த ஜெல்லில் இருந்து நீரானது பிரிந்துவிடும்.அந்நீருடன்  நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தடவி வந்தால்,முடி நன்றாக வளரும்.மேலும், உடல் உஷ்ணம் குறையும்.ஆழ்ந்த உறக்கம் வரும்.

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பொரித்த பெருங்காயம் மற்றும் பனைவெல்லத்தை சேர்த்து நன்றாக இடிக்க வேண்டும். இதனை தினமும் அரை கிராம் அளவு சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் மாதவிடாய் சார்ந்த வயிற்றுவலியானது குணமாகும்.

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக கழுவிக்கொள்ளவும். அத்துடன்,முருங்கைப்பூ சேர்த்து அரைக்கவும்.ஒரு வாரத்திற்கு இதனை காலையில் சாப்பிட்டு வந்தால் மூல நோயானது குணமாகும்.

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளவும்.அதனை தடிப்பின் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் தடிப்புகள் குணமாகும்.

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக கழுவிக்கொள்ளவும். அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த சாறை பருகினால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.

கற்றாழை சாறானது தீக்காயம் மற்றும் புண்களைக் குணமாக்கும்.

கற்றாழை சாறானது மூட்டு வலியைக் குணமாக்கும்.

கற்றாழை பவுடர் கொண்டு பற்களை தேய்த்து வந்தால் பல் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

கற்றாழை சாறானது பல் ஈறுகளை உறுதியாக்குகிறது.

கற்றாழை சாறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை சரியாகும்.

கற்றாழை தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே

ஊளைச் சதையைக் குறைக்கும் பிரண்டையின் மகத்துவம் – Pirandai Benefits in TamilPirandai Benefits in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top