பூஜை பொருட்கள் பளபளப்பாக ஜொலிக்க மிக எளிய வழிகள் உங்களுக்காக-Poojai porutkal

Poojai porutkal

Poojai porutkal-பூஜை அறை மங்களகரமாகவும், தெய்வீகத் தன்மையுடன் இருந்தால், அந்த வீட்டில்  சகல ஜஸ்வர்யமும் பெருகும். வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் செல்வமும், ஒற்றுமையும் பெருகும்.

பூஜை அறையில் உள்ள பொருட்களைச் சுத்தமாக, கழுவி மஞ்சள், குங்குமம் வைத்து, மலர் வைத்து, ஆராதனை செய்தால் மன அமைதி பெறும். பூஜை அறையில் உள்ள பொருட்களை எவ்வளவு கழுவியும் பளபளப்பாக இல்லையா? இதை மட்டும் செய்தால் போதும்… வீட்டின் பூஜை அறையில் உள்ள பொருட்கள் பளபளப்பாக இருக்கும்.

பூஜை பொருட்கள் பளபளப்பாக ஜொலிக்க

முதலில் பூஜை பொருட்களில் உள்ள எண்ணெய் பசையை ஒரு காகிதத்தைக் கொண்டு, நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி இந்துப்புவை எடுத்துக்கொள்ளவும்.

பின்னர், மூன்று தேக்கரண்டி கோதுமை மாவை அதில் சேர்க்கவும். புளி கரைத்த தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பின்னர், எலுமிச்சைச் சாறை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர், பூஜை பொருட்களின் மீது இதனை தடவ வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், நன்றாக தேய்த்து கழுவினால், பூஜை பொருட்கள் பளபளப்பாக இருக்கும். பின்னர், பூஜை பொருட்களை நன்றாக துடைத்து, மஞ்சள் , குங்குமம் வைத்தால் பூஜை பொருட்கள் பளபளப்பாக இருக்கும்.

வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெருகும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி, தெய்வத்தை மனதில் நிறுத்தினால், எடுத்த காரியம் கைகூடும்.

இதையும் படிக்கலாமே –

அமாவாசை அன்று மறந்தும் கூட இதை செய்யாதீங்க-Amavasaya

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top