ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023
Chitra pournami 2023-சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்ரா பௌர்ணமி ஆகும்.இந்த வருடம் சித்ரா பௌர்ணமி மே -5 வெள்ளிக்கிழமை வருகிறது. சித்ரா பௌர்ணமி நாளன்று சித்ர குப்தர் பிறந்தார் என்பது வரலாறு. சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தர் கோவிலில் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
சித்ர குப்தர் கோவில்
சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தர் வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். சித்ர குப்தர் கோவில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரில் உள்ளது. சித்ர குப்தர் மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கத்தைத் தருவார்.
இந்த சித்ரா பௌர்ணமி நாளன்று சித்ர குப்தரை வணங்கி, நாங்கள் கடுகு அளவு செய்த புண்ணியத்தை மலை அளவாகவும், மலை அளவு செய்த பாவத்தைக் கடுகு அளவாகவும் எடுத்துக்கொண்டு எங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் தருக என மனதார வேண்டினால், சித்ர குப்தர் அருளால் நல்வாழ்வு அமையும்.
சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்யும் முறை
சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும். பூஜை அறையைச் சுத்தம் செய்து, சாமி படத்திற்கு மலர்களைச் சூட வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று ஒரு வேளை உண்ணா நோன்பு இருந்தால் செல்வம் பெருகும். அன்றைய நாள் உணவில் உப்பு, பால், தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே –பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham
சித்ர குப்தர் வழிபாடு செய்யும் முறை
செம்பு கலசத்தைக் கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் , குங்குமம் வைக்க வேண்டும். பின்னர், கலசத்தின் நடுவில் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சித்ர குப்தரை மனதார நினைத்து, பாசிப்பயிறு பாயசத்தைச் செய்து, கடவுளுக்கு வைத்து படைக்க வேண்டும். புளிசாதம், எலுமிச்சைசாதம், சர்க்கரைப்பொங்கல் ஏதேனும் ஒரு சாதத்தைக் கடவுளுக்கு வைத்து படைக்க வேண்டும்.
தோஷம் நீக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு
சித்ர பௌர்ணமி அன்று சித்ர குப்தரை மனதார நினைத்து வழிபட்டால், கேது தோஷம் நீங்கும். நவக்கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும். ராகு தோஷம், நாக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்.
சித்ரா பௌர்ணமி வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்
சித்ர குப்தரை மனதார நினைத்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். கடன் தொல்லை தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும்.
சித்ரா பௌர்ணமி அன்று கொடுக்க வேண்டிய தானம்
சித்ரா பௌர்ணமி அன்று உணவு தானம் செய்தால், செல்வ வளத்துடன் வாழ வழி கிடைக்கும். ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் தானமாகக் கொடுத்தால், பேரும் புகழோடும் வாழ்வர். ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் ஆடைகளைத் தனமாகக் கொடுத்தால், பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியம் கிடைக்கும்.
பெண் தெய்வ வழிபாடு
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி வெள்ளிக்கிழமை வருவதால், அந்நாளில் பெண் தெய்வத்தை வழிபடுவது சகல ஜஸ்வர்யமும் கிடைக்க வழி செய்யும். அம்மனை மனதார வழிபட்டு, முறையாக விரதம் இருக்க வேண்டும். அந்நாளில் மஞ்சள், குங்குமம், உப்பு, புதிய நோட்டு ஆகிய பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும்.
கிரிவலம்-Chitra pournami 2023 girivalam
சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் மேற்கொண்டால் எடுத்த காரியம் கைகூடும். செல்வம் பெருகும். சிவபெருமானை மனதார நினைத்து, வழிபட்டால் தடைகள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். நோய் நொடி இல்லா ஆரோக்கியமான வாழ்க்கையும்,
Pingback: இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023
Pingback: பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham
Pingback: ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வி