மணிமேகலை -Manimegalai story- Manimegalai in Tamil

Manimegalai in Tamil

மணிமேகலை கதை சுருக்கம் -Manimegalai story

Manimegalai in Tamil

மணிமேகலை – கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள்.

மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள்.

மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது.

அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசமயான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான்.

அவனிடமிருந்து தப்ப மணிமேகலை ‘காயசண்டிகை’ என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காய சண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான்.

உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள். மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள். இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை.

மணிமேகலை pdf -Manimegalai in Tamil -Manimekalai in tamil

Manimegalai in Tamil

தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சமயம் மனித வாழ்வில் பேரிடம் பெற்றதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

மணிமேகலை பத்தினிப் பெண்களை மூவகைப்படுத்திக் கூறுகின்றது.

  1. கணவன் இறந்தவுடன் எரி மூழ்கி இறப்பவர்,
  2. தனியே எரி வளர்த்து இறப்பவர்,
  3. கணவனை நினைந்து கைம்மை நோன்பேற்பவர்

என மணிமேகலை இவர்களை வகைப்படுத்துகின்றது.

மணிமேகலை மனிதர் உடம்பை இழிவானதாகக் கருதி உரைக்கின்றது . உடம்பு புலால் நிறைந்தது; மூத்துத் தளர்வது; பிணி கூடுவது; குற்றம் புரிவது; கவலையின் கொள்கலம் என்று கூறி இதனைப் புறக்கணிப்பதே சரியானது என்கின்றது.

மணிமேகலை காதை

Manimegalai in Tamil

மணிமேகலை என்னும் காப்பியத்தில் முப்பது காதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதையாகும். இக்காதை, நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால் (72 அடிகள்) அமைந்தது.

மணிமேகலை ஆசிரியர் பெயர் தமிழ்

Manimegalai in Tamil

மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். 

இதையும் படிக்கலாமே

ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர் -Aimperum Kappiyangal in Tamil

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு pdf- Annai Therasa History in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top