ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர் -Aimperum Kappiyangal in Tamil

Aimperum Kappiyangal in Tamil

ஐம்பெரும் காப்பியங்கள் pdf

Aimperum Kappiyangal in Tamil

Aimperum Kappiyangal in Tamil- ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்

ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

Aimperum Kappiyangal in Tamil
ஐம்பெரும் காப்பியங்கள் யாவைஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர்
சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்
சீவகசிந்தாமணிதிருத்தக்க தேவர்
வளையாபதி
குண்டலகேசிநாதகுத்தனார்
ஐம்பெரும் காப்பியங்கள் pdf

Kappiyangal in tamil

Aimperum Kappiyangal in Tamil
சிலப்பதிகாரம்சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி – கண்ணகியின் சிலம்பால் உருவாகிய வரலாறு
மணிமேகலைஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி – இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசிகுண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். – குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி – குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.
வளையாபதிவளையல் அணிந்த பெண் வளையாபதி – வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவக சிந்தாமணிசிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். – சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
Kappiyangal in tamil

ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர்

Aimperum Kappiyangal in Tamil
நூல்ஆசிரியர்பாவகைநூல் அமைப்புசமயம்
சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்நிலைமண்டில ஆசிரியப்பா +  கொச்சக கலிப்பா3 காண்ட ம், 30காதை, 5001அடிகள்சமணம்
மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்நிலைமண்டில ஆசிரியப்பா30 காதை , 4755வரிகள்பௌத்தம்
சீவகசிந்தாமணிதிருத்தக்கதேவர்விருத்தம்13 இலம்பகம்,3145 பாடல்கள்சமணம்
வளையாபதி விருத்தம்72 பாக்கள் கிடைத்துள்ளனசமணம்
குண்டலகேசிநாதகுத்தனார்விருத்தம்224 பாடல்கள் கிடைத்துள்ளனபௌத்தம்
Kappiyangal in tamil

காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

Aimperum Kappiyangal in Tamil

தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார்.

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம் (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்)

மணிமேகலை

Aimperum Kappiyangal in Tamil

சிலப்பதிகாரத்தை தொடர்ந்து எழுந்த காப்பியம் மணிமேகலையாகும். மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி.

மணிமேகலை வேறு பெயர்கள்

  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்

சீவக சிந்தாமணி

இது சோழர் காலத்தில் எழுதப்பட்டது. கி.பி. 9ம் நூற்றாண்டில் குணபத்தரன் எழுதிய உத்திரப்புராணத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

சீவக சிந்தாமணி வேறு பெயர்கள்

  • மணநூல்
  • முக்திநூல்

வளையாபதி

இந்நூல் தற்போது வரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. நூலைப் போலவே நூல் ஆசிரியர் யார்? எந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்? காப்பியத்தின் தலைவன் யார்? என்பதும் அறியப்படவில்லை.

வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. இந்நூற் பாடல்கள் மொத்தம் 72 கிடைத்துள்ளன.

குண்டலகேசி

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நூலான குண்டலகேசி பௌத்தம் சார்ந்த நூலாகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலை எழுதியவர் நாதகுத்தனார் என்பவராவார்.

இதற்கு குண்டலகேசி விருத்தம் என்ற பெயருமுண்டு. இந்நூலின் முழுமையான பாடல்களாக 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

குண்டலகேசி வேறு பெயர்கள்

  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

இதையும் படிக்கலாமே

திருவள்ளுவர் வரலாறு-About Thiruvalluvar in Tamil -Thiruvalluvar History in Tamil

Kamarajar history in tamil – About kamarajar in tamil – Kamaraj katturai in tamil – காமராசர் வாழ்க்கை வரலாறு

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top