இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023

Madurai meenakshi amman thirukalyanam- 2023

Madurai meenakshi amman thirukalyanam- 2023 பக்த கோடிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 2 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தைக் காண திரளான மக்கள் கூடியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணி முதல் 8.59 மணி வரை மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அம்மனின் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்பத்தில் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வர் திருக்கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே-ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசி மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு உள்ளார். மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, புனித நீராடி வழிபாட்டைத் தொடங்குவது வழக்கம். விபூதி விநாயகருக்கு அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தி பாடலைப் பாடியவாறு கோவிலின்  உள் நுழைவது வழக்கம்.

பக்தர்கள் தூய மனதோடு, அர்ச்சனைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வர். கோவிலில் தெய்வங்கள் மிக நேரத்தியாக அலங்கரிக்கப்படுவது வழக்கம். மலர் மாலைகள் மற்றும் பட்டு ஆடைகளால் தெய்வச்சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் காட்சி தருவார். கோவிலில் உள்ள பிரதான பூசாரிகள் பூஜைகளை நடத்துவார்கள். திருமண சடங்குகள் அனைத்தும் முறைப்படி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடந்தேறியப்பின் சுந்தரேஸ்வர் மற்றும் மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் வந்து மக்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண திரளான மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டு அம்மனின் ஆசியையும், அனுகிரகத்தையும் பெற்று வளமாக வாழ்வோம்.

Share this post

1 thought on “இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023”

  1. Pingback: ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top