குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil

Kula deivam kovil

குலதெய்வம் வழிபட உகந்த நாள்

Kula deivam kovil

பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் பெளர்ணமி . ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

குலதெய்வம் வழிபடும் முறை

Kula deivam kovil

வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி, வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும்

குலதெய்வ வழிபாடு வீட்டில் செய்வது எப்படி?

Kula deivam kovil

நாம் தினமும் குலதெய்வத்தை வணங்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும். குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நம்மால் முடிந்த அளவுக்கு குலதெய்வக் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ய வேண்டும். 

குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வத்தின் பெயரை தினந்தோறும் உச்சரிக்க வேண்டும். இப்படி குலதெய்வத்தை பெண்கள் மட்டும் தான் நினைவு கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே தினமும் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு, அவரவர் வேலையை தொடங்கினால்,  நல்லபடியாக அந்த நாள் செல்லும். 

அமாவாசை குலதெய்வ வழிபாடு

Kula deivam kovil

குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.

அமாவாசை நாளில்  முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.

குலதெய்வம் என்பது உங்கள் முன்னோர்கள் வழிபட்ட குடும்ப தெய்வங்களாகும். அவைகளை அம்மாவாசை பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்வது எந்த தவறும் இல்லை.

ஆகையினால் நீங்கள் யாருடைய சொற்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்கள் மன அமைதிக்காக உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாத்வீகமான முறையில் நெய்விளக்கு ஏற்றி.

உங்களால் முடிந்த வகையில் பொங்கல் சுண்டல் வடை அப்பம் தேங்காய் பழம் தாம்பூலம் இவைகளை ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து வழிபாடு செய்து வரவும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்

குலதெய்வ அருள் பெற

Kula deivam kovil

வெள்ளிக்கிழமை அன்று அன்றாட பூஜை செய்யும் பொழுது கட்டாயம் குலதெய்வத்தை வேண்டி குலதெய்வம் படம் வைத்து இருப்பவர்கள் குலதெய்வத்தின் முன்பு அகல் தீபம் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அது போல் இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் சகலமும் வசமாகும். தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை தான் அது. எலுமிச்சை பழத்தை வைத்து, குலதெய்வ மந்திரம் உச்சரித்து வழிபட்டு வந்தால், உங்களுடைய குலதெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரியும்.

குலதெய்வம் வீட்டில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Kula deivam kovil

தீபம்

முதலில் பூஜை அறை தீபம் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து விளக்கேற்றும் போது அந்த விளக்கு எப்போதும் போல் இல்லாமல் மிகவும் விளக்கு கொழுந்து விட்டு உயர உயர ஏரிகிறது என்றாள் அந்த தீபத்தை வளர்த்துக் கொண்டிருப்பதை உங்கள் குலதெய்வமாகத்தான் இருக்கும்.

பல்லி சத்தமிடுதல்

இரண்டாவதாக பல்லி சத்தமிடுதல் ஆம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இறை சக்தி என்றால் தெய்வ சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இறை சக்திகள் அதிகமாக இருக்கும் இடத்தில் பல்லிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்றால் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கும் இதுவே உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை காட்டி கொடுத்து விடும்.

சந்தனத்தின் நறுமணம்

மூன்றாவதாக திடீர் நறுமனம் வருதல் ஆம், வீட்டில் சந்தனத்தின் நறுமணம், விபூதியி நறுமணம், பூவின் வாசம் இந்த வாசனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் தீடிர் வாசனைகள் வருகிறது என்றால் உங்கள் வீட்டில் குல தெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.

சுருட்டு வாசனை

மேலும் சில குடும்பத்தினருக்கு கருப்பன், அய்யனார், முனியசாமி போன்ற ஆண் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும் இந்த தெய்வங்களுக்கெல்லாம் நாம் சுருட்டை ஒரு பிரசாதமாக வைத்து நாம் அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று சுருட்டு வாசனை வருவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் குல தெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையாக நம்பலாம்.

கோவில் எலுமிச்சை

நான்காவதாக எலுமிச்சை பழம் ஆம் நீங்கள் எப்போது கோவில்களுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டில் நிலை வாங்கி அல்லது பூஜை அறையிலும் வைத்திருப்பீர்கள். அப்படி வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் நாட்கள் செல்ல செல்ல சுருங்கி காய்ந்து போகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

காகம் கரைதல்

ஐந்தாவது காகம் ஆம் காகமும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும்

குலதெய்வம் உத்தரவு

Kula deivam kovil

ஆறாவதாக அறிகுறி சில சமயங்களில் நீங்கள் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் குறித்தோ அல்லது நல்ல காரியங்கள் குறித்தோ பேசும்போது அல்லது இந்த நல்ல குறித்தோ குறித்து உங்கள் குல தெய்வங்களிடம் நீங்கள் பிராத்தனை வைக்கும் போது உங்கள் குலதெய்வங்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க நோக்கத்தில் ஒரு சில விஷயங்களை செய்வார்கள் இதில் சிலருக்கு தெரிந்த பொதுவான விஷயம் உங்கள் குலதெய்வத்தின் மேல் வைக்கின்ற பூ கீழே விழும் அல்லது எலுமிச்சம்பழம் கீழே விழும் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்.

குலதெய்வ அபிஷேக பொருட்கள்

Kula deivam kovil

இறைவனுக்கு செய்யக்கூடிய அபிஷேக திரவியங்களின் பெயர்களை வரிசைப்படுத்தவும். எத்தனை விதமான அபிஷேக பொருட்கள் உள்ளது என்பது பற்றி விவரமாக பதிவிட முடியுமா#

பதினொன்று அபிஷோகங்கள்.

1 வாசனை தைலம்/ எண்ணெய்

2 பஞ்சகவ்யம்

3 பால்

4 தயிர்

5 நெய்

6 பஞ்ஞாமிர்தம்

7 கரும்புசாறு

8 பழச்சாறு/ பழங்கள்

9 சந்தனம்/ பன்னீர்

10.விபூதி

10 கும்பம் நீர் / ஸ்வர்ணாழிஷேகம்

குலதெய்வம் படம் வீட்டில் வைக்கலாமா?

Kula deivam kovil

நம் வாழ்வின் பிரச்னைகள் ஏற்படும்போது அவை ஏன் நிகழ்கின்றன என்று யோசிப்பதைவிட அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்தது என்பார்கள் ஞானிகள். நம்மில் பலரும் நம் பிரச்னைகளுக்காக ஜோதிடர்களை அணுகிக் காரணம், பரிகாரம் கேட்பதுண்டு. அப்போது பல ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டையே பரிகாரமாகக் கூறுவர்.

குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

சில குலதெய்வங்களின் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். மனதால் நினைத்து வழிபடும் பழக்கமே சில குடும்பங்களில் உள்ளது. அப்படியானால் குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்றால் வழிபடலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே

கால பைரவர் மந்திரம் – தனம் தரும் பைரவர் பாடல் வரிகள் -அஷ்ட பைரவர் மந்திரம்- kalabhairava ashtakam in tamil lyrics – Bairavar 108 Potri in Tamil

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top