நிலவேம்பின் மருத்துவக் குணங்கள் -Nilavembu Kashayam Uses in Tamil

Nilavembu Kashayam Uses in Tamil

Nilavembu Kashayam Uses in Tamil – சிறியாநங்கை செடி என்று அழைக்கப்படும் நிலவேம்பில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. நிலவேம்பு வெள்ளைநிறத்தில் பூ பூக்கும் செடியாகும். நிலவேம்பு செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. நிலவேம்பு செடியானது பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி போன்ற நோய்களைத் தீர்க்கக்கூடியது ஆகும்.

நிலவேம்பு கசாயம் செய்யும் முறை

Nilavembu Kashayam Uses in Tamil

டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்புடன் மேலும் 8 பொருட்கள் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. நிலவேம்பு வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ள  வேண்டும்.

அதில் ஒரு தேக்கரண்டி பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக சுண்ட வேண்டும். அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

Nilavembu Kashayam Uses in Tamil

நிலவேம்பு  கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். இந்த நிலவேம்பு கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்கும்.

உடல் குளிர்ச்சி

 நிலவேம்பு கசாயத்தைக் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். உடலானது குளிர்ச்சி பெறும். உடலானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள்

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே

குங்குமபூவின் மருத்துவக்குணங்கள் -Kungumapoo Benefits in Tamil

முகப்பளிச்சிட  மிக எளிமையான வழிகள் -முகம் பளிச்சென்று இருக்க -Mugam Palapalakka Tips

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top