ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் – வசம்பு
எவ்வளவு முயற்சி செய்தும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை என்று பெரிதும் புலம்பும் மக்களே! ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் இந்த பொருளை, உச்சந்தலையில் வைத்துப்பாருங்கள்… உங்கள் தலையெழுத்தே மாற்றக்கூடிய அந்த பொருள் வசம்பு.
இந்த பொருளால் பணம் சேர்த்துக்கொண்டே இருக்கும். நகைகள் மேன்மேலும் வாங்கும் யோகம் கிடைக்கும். உற்றார், உறவினர் மத்தியில் நமக்கான நன்மதிப்பு பெருகும். நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய அந்த அதிஷ்டப் பொருளைப் பற்றி காண்போம்.
வசம்பு கிடைக்கும் இடம்
கோடீஸ்வரர் யோகத்தைக் கொட்டித்தரக்கூடிய இந்த பொருளில் பல சக்தி உள்ளது. பெயர் சொல்லாதது என்று அழைக்கப்படும் இந்த வசம்பு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வசம்பானது பணத்தை ஈர்க்கக்கூடிய ஆற்றலை உடையது.
இந்த பொருளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். இதனை வாங்கும் போது இந்த பொருள் இவ்வளவு விலையா? என்று பேரம் பேசக்கூடாது. எவ்வளவு விலையானாலும் முதலில் இந்த பொருளை வாங்கிக்கொள்ள வேண்டும்.
வசம்பைப் பயன்படுத்தும் முறை
வசம்பை வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வைக்கவேண்டும். வசம்பை சமையலறையிலோ, படுக்கை அறையிலோ வைக்கக்கூடாது. வசம்பு தெய்வீக சக்தியை உடையது என்பதால், இதனை பூஜை அறையில் மட்டுமே வைக்க வேண்டும்.
காலையில் எழுந்தததும் குளித்துவிட்டு, பூஜை அறைக்குச் செல்ல வேண்டும். ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நெய்யை ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், திரியைப் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
பின்னர், வசம்பை எடுத்து, தீபச்சுடரொளியில் காட்ட வேண்டும். வசம்பின் நுனிப்பகுதி கருப்பாக மாறும். அந்த கருப்பான பகுதியில் நெய்யைத் தடவிக்கொள்ள வேண்டும். இப்பொழுது வலதுகை மோதிர விரலால் இந்த வசம்பு பொட்டை எடுத்து உச்சந்தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொட்டை நெற்றியிலும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு 48 நாட்கள செய்து வர வேண்டும்.
இந்த வசம்பு பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டு வெளியில் சென்று வந்தால், எந்தவித துர்சக்தியும் நம்மை அண்டாது. மேலும், இந்த வசம்பு பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டு முக்கியமான விஷயத்திற்குச் சென்று வந்தால், அந்த செயலில் வெற்றி உண்டாகும்.
வசம்பு பொட்டின் மகிமை
புதிய தொழில் தொடங்க, கடன் வசூலிக்கச் செல்லும்போது, இந்த பொட்டை வைத்துக்கொண்டு சென்றால், அந்த செயல் வெற்றிகரமாக முடியும்.
பிறந்த குழந்தைக்கு மைக்கு பதிலாக இந்த வசம்பு பொட்டை வைப்பர். இந்த பொட்டை வைத்தால், எந்தவித துர்சக்தியும், காத்து கருப்பும் குழந்தையை நெருங்காது என்பது நம்பிக்கை.
தொழில் ரகசியம்
பெரிய பெரிய பணக்காரர்களின் தொழில் முன்னேற்ற இரகசியமாக நிச்சயமாக இந்த வசம்பு பொட்டு இருக்கும். மாபெரும் சக்தியை உடைய இந்த வசம்பு பொட்டை, வைத்துக்கொண்டால் அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக நீங்கள் மாறுவீர்கள்.
தொடர்ந்து இந்த பொட்டை நீங்கள் வைத்துக்கொண்டால், நீங்கள் மற்றவர் மத்தியல் அதிஷ்டத்தைக் கொடுக்கும் நபராக தெரிவீர்கள். முக்கியமான விஷயத்திற்கு உங்களை அழைத்து செல்ல விரும்புவார்கள். நீங்கள் உடன் வந்தால், அந்த செயல் வெற்றியில் முடியும் என்று நம்புவார்கள்.
இந்த பொட்டை நீங்கள் வைத்து வந்தால், அடுத்தவர் உங்களிடம் பழகும் விதமும், நீங்கள் மற்றவரிடத்தில் பழகும் விதமும் மாறும். அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக மாறுவீர்கள். தொட்டது எல்லாம் வெற்றியாக முடியும். பண வரவு அதிகரிக்கும். வசம்பு துண்டை பர்ஸில் வைத்துக்கொண்டால், பணவரவு அதிகமாகும். எதிர்பார்க்காத அளவு பணம் சேரும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வசம்பு பொட்டை, நாள்தோறும் நெற்றியல் வைத்துக்கொண்டு, வளமான வாழ்க்கையை வாழ்வோம். அளவிட முடியாத செல்வமும், சொல்லில் அடங்கா மகிழ்ச்சியையும் பெற்று வாழ்வோம்.
இதையும் படிக்கலாமே –
2.ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023
Pingback: கௌரி பஞ்சாங்கம் இன்றைய நல்ல நேரம் - Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram Free