கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி  தீயல், கண்டங்கத்திரி ரசம் போதும் சளி, இருமல், சுவாசக்கோளாறு பிரச்சனையே இருக்காது- Kandankathri kuzhambu, Kandankathri theeyal, Kandankathri rasam…

Kandankathri

முட்கள் நிறைந்த கண்டங்கத்திரி முழு செடியுமே மருத்துவக் குணம் வாய்ந்த செடியாகும். இதன் காய் கத்திரிக்காய் போல் காணப்படும். கண்டங்கத்திரியின் காய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்டங்கத்திரியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

கண்டங்கத்திரியைப் பயன்படுத்தி கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி தீயல், கண்டங்கத்திரி ரசம் செய்வது எவ்வாறு என்பது பற்றி காண்போம்.

கண்டங்கத்திரி குழம்பு -Kandankathri kuzhambu

Kandankathri kuzhambu

கண்டங்கத்திரியில் குழம்பு செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி குழம்பு செய்வது எப்படி? என காண்போம்.

தேவையான பொருட்கள்

கண்டங்கத்திரி காய் – ஒரு கைப்பிடியளவு

தக்காளி -2

வெங்காயம் -3

பூண்டு – 10 பற்கள்

புளிகரைசல் – ஒரு டம்ளர் அளவு

மஞ்சள் தூள் –கால் தேக்கரண்டி

குழம்பு மிளகாய் தூள் –தேவையான அளவு

உப்பு –தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு, சீரகம், கருவேப்பிலை

செய்முறை

கண்டங்கத்திரிகாயை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கண்டங்கத்திரிகாயின் காம்பை நீக்கி, இரண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். பின்னர், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியில் தண்ணீர் மற்றும் உப்பு போட்டு ஊற வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தப்பிறகு, கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டுக்கொள்ளவும். பின்னர், வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள கண்டங்கத்திரியைக்காயை போட்டு, பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

பின்னர், மஞ்சள் தூள் போடவும். காய்கறி நன்றாக வதங்கிய பின்  மிளகாய் தூள்  போட்டுக்கொள்ளவும். பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பின் புளிகரைசலை ஊற்றிக்கொள்ளவும். குழம்பு நன்றாக சுண்டும் வரை கிளறிக்கொண்டு இருக்கவும். மணமணக்கும் கண்டங்கத்திரி குழம்பு பெரியவர் முதல் சிறியவர் வரை  அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குழம்பாகும்.

இதையும் படிக்கலாமே-கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இது தெரியாமப் போச்சே-Kandankathri

கண்டங்கத்திரி தீயல்-Kandankathri theeyal

Kandankathri theeyal

கண்டங்கத்திரியில் தீயல் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி தீயல் செய்வது எப்படி? என காண்போம்.

தேவையான பொருட்கள்

கண்டங்கத்திரி காய் – ஒரு கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் – 10 முதல் 15 வரை

மாசலாவிற்கு தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் -2,  துருவிய தேங்காய் சிறிதளவு, பூண்டு -5 பற்கள், சீரகம், நெல்லிக்காய் அளவு புளி, மல்லித்தூள் 

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் , கடுகு

செய்முறை

எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்தப்பிறகு கடுகைப் போட்டுக்கொள்ளவும். கடுகு வெடித்தப்பின் சின்ன வெங்காயத்தைப் போட்டுக்கொள்ளவும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியப்பின் கண்டங்கத்திரி மற்றும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர், மாசலாவிற்குத் தேவையான பொருட்களை தனியாக வதக்கி, அரைத்து இதில் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக வதக்கிக்கொண்டே இருக்கவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சுண்டியவுடன் இறக்கிக்கொள்ளவும். சுவையான கண்டங்கத்திரி தீயல் சுவாசக்கோளாறை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது ஆகும்.

கண்டங்கத்திரி இரசம் – Kandankathri rasam

Kandankathri rasam

கண்டங்கத்திரியில் இரசம் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி இரசம் செய்வது எப்படி? என காண்போம்.

தேவையான பொருட்கள்

Kandankathri

கண்டங்கத்திரி இலைகளைச் சுத்தம் செய்து, அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

புளி கரைசல் தண்ணீர்- நெல்லிக்காய் அளவு

பருப்பு வேக வைத்த தண்ணீர்

மாசலாவிற்கு தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் -2 ,கொத்தமல்லி, பூண்டு -5 பற்கள் ,மிளகு, சீரகம் இவற்றை இடித்துக்கொள்ளவும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் 

செய்முறை

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பிறகு உளுத்தம் பருப்பைப்போட்டுக் கொள்ளவும். பின்னர், இடித்து வைத்துள்ள மாசலாவைப் போட்டுக்கொள்ளவும். நன்றாக வதக்கவும். பிறகு புளி கரைசலை ஊற்றவும்.

பின்னர், கண்டங்கத்திரி இலை சாறை ஊற்றவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பிறகு பருப்பு வேக வைத்த தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும். இரசம் கொதித்தப்பின் கொத்தமல்லி  மற்றும் கருவேப்பிலை தழையைப் போட்டு, இரசத்தை இறக்கிக்கொள்ளவும். சுவையான மணமணக்கும் கண்டங்கத்திரி இரசத்தைச் சாப்பிட்டால் இருமல் தொந்தரவு வரவே வாராது.

கண்டங்கத்திரியில் செய்யக்கூடிய உணவுமுறைகளைப் பற்றி பார்த்தோம். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த கண்டங்கத்திரி செடியில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நம் வீட்டின் அருகில் வளர்ந்தால், அதனை முறையாகப் பராமரிக்கவும். மக்களின் நோயைத் தீர்க்கக்கூடிய இந்த செடியைப் பராமரிப்பது நமது கடமையாகும்.

Share this post

1 thought on “கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி  தீயல், கண்டங்கத்திரி ரசம் போதும் சளி, இருமல், சுவாசக்கோளாறு பிரச்சனையே இருக்காது- Kandankathri kuzhambu, Kandankathri theeyal, Kandankathri rasam…”

  1. Pingback: ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top