முகப்பரு வராமல் தடுக்க சில எளிய வீட்டு வைத்தியம் உங்களுக்காக-முகப்பரு கரும்புள்ளி நீங்க- Face Acne in Tamil

முகப்பரு கரும்புள்ளி நீங்க

Face Acne in Tamil-முகப்பரு கரும்புள்ளி நீங்கஇளம் பெண்கள்  பெரும்பாலும் பாதிக்கப்படுவது முகத்தில் தோன்றும் பருக்களால் ஆகும். முகப்பருவானது முகத்தின் அழகு மற்றும் சருமப் பொலிவைக் குறைக்கும் வகையில் உள்ளது.

முகப்பரு உடனடியாக போக -முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் (pimple remove tips in tamil)

முகத்தில்  எண்ணெய் மற்றும் அழுக்குச் சேர்வதால், முகப்பரு தோன்றுகிறது. பெரும்பாலும், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் சிலருக்கு முகப்பரு தோன்றும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான, புளிப்பான, உப்பு சுவை மிகுந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழச்சாறு பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். தேவையான அளவு தண்ணீர் குடித்தால், சருமம் பொலிவாக இருக்கும்.

குளிர்ந்த நீரைக்கொண்டு முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.

முடிந்தவரை முகப்பருவைக் கிள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். முகப்பருவை கிள்ளுவதால் அதன்மூலம் முகப்பரு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தக்காளி சாறை முகத்தில் தடவி, முகத்தை கீழிந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு, செய்தால் முகப்பரு வடு மறையும்.

சின்ன வெங்காய சாறை முகப்பரு மீது தடவி வந்தால் முகப்பரு மறையும்.

தயிருடன் வாழைப்பழத்தோலை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, முகப்பரு மீது தடவி வந்தால், முகப்பருவானது மறையும்.

வெள்ளரிகாயுடன் பப்பாளி பழத்தை அரைத்து முகப்பருவின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு, செய்தால் முகப்பரு வடு மறையும்.

பாசிப்பயிறு மாவுடன் கற்றாழை சாறை சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதனை, முகத்தில் தடவிக்கொள்ளவும். சிறிது நேரம் ஊற வைக்கவும். இவ்வாறு, செய்தால் முகப்பரு வடு மறையும்.

முகத்திற்கு அதிகமாக சோப்பு போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கடலை மாவுடன், அரிசி மாவைக் கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு, செய்தால் முகப்பரு வடு மறையும்.

சாதிக்காயுடன் சந்தனம் மற்றும் மிளகு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை, முகத்தில் தடவி வந்தால் முகப்பருவானது மறையும்.

பாசிப்பருப்பை நன்றாக பொடியாக்கிக்கொள்ளவும். அத்துடன், நெல்லிக்காய் பொடியைக் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்ததும் முகத்தைக் கழுவினால், முகப்பரு மறையும்.

பசுஞ்சானத்தால் செய்த விபூதியை தண்ணீரில் குழைத்து, முகப்பருவின் மீது தடவி வந்தால் முகப்பருவானது மறையும்.

துத்தி இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த விழுதை, முகப்பருவின் மீது தடவி வந்தால் முகப்பருவானது மறையும்.

சந்தனத்தை ரோஸ் வாட்டருடன் கலந்து முகப்பருவின் மீது தடவி வந்தால் முகப்பருவானது மறையும்.

எள் எண்ணெயுடன் கற்பூரத்தை குழைத்துக்கொள்ளவும். இதனை, முகப்பருவின் மீது தடவி வந்தால் முகப்பருவானது மறையும்.

கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். அத்துடன், எலுமிச்சை சாறைக் கலந்து முகப்பருவின் மீது தடவி வந்தால், முகப்பரு குணமாகும்.

கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் கலந்து முகப்பருவின் மீது தடவி வந்தால், முகப்பரு குணமாகும்.

தேங்காய் எண்ணெயுடன் , கரிசலாங்கண்ணி சாறை சேர்த்து காய்ச்சிக்கொள்ள வேண்டும். பின்னர், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால், பொடுகு நீங்கும். பொடுகு மூலம் தோன்றும் முகப்பருவானது மறையும்.

இதையும் படிக்கலாமே

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம் – கருவளையம் மறைய டிப்ஸ்- Karuvalayam Poga Tips in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top