தொப்பையைக் குறைக்க வேண்டுமா, உடனே அருந்துகள் வாழைத்தண்டு சாறு – Benefits of Banana stem in Tamil

 Benefits of Banana stem in Tamil

Benefits of Banana stem in Tamil – முக்கனிகளுள் ஒன்றான வாழை மருத்துவம் குணம் நிறைந்த பழம் ஆகும்.  வாழை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் உள்ளது. வாழை பழம், வாழை தண்டு, வாழை பூ, வாழைக்காய் , வாழை இலை என முழு மரமும் மருத்துவம் குணம் நிறைந்தது ஆகும்.

 வாழை பழத்தில் பல வகைகள் உள்ளன. அவை, செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மலை வாழைப்பழம், பேயன் பழம், பச்சை வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், பெங்களூர் வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கதலிப்பழம், மோரீஸ் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் ஆகியவை ஆகும்.

வாழையின் பயன்கள்…

  • உடல் எடையைக் குறைக்கும்.
  • தொப்பையைக் குறைக்கும்.
  • உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
  • சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்களை கரைக்கும்.
  • காமாலை நோய் குணமாகும்.
  • கை, கால் எரிச்சல் குணமாகும்.
  • உடல் உஷ்ணம் குறையும்.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
  • செரிமானத்தை மேம்படுத்தும்.

வாழையின் நன்மைகள்…

வாழைத்தண்டு-Benefits of banana stem

வாழைத்தண்டை சாறுடன் பருகி வந்தால், உடல் எடையானது குறையும். மேலும், தொப்பையும் குறையும்.

வாழைத்தண்டை கூட்டு மற்றும் பொரியல் செய்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

வாழைத்தண்டு  சாறுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வெளியேறும்.

வாழைத்தண்டு  சாறுடன்  எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும்.

வாழைத்தண்டை உலர்த்தி அதனை பொடியாக்கவும். அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும்.

வாழைப் பூ- Banana flower benefits

வாழைப் பூ இடித்து அதனை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்க வேண்டும். பின்பு எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், கை, கால் எரிச்சலானது குணமாகும்.

வாழைப் பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.

வாழைப் பூவை சுத்தம் செய்து, அதனை நறுக்கிக்கொள்ளவும். அதனுடன், சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து பொரியலாக்கி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவானது குறையும்.

வாழைப் பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், கர்ப்பபை சார்ந்த பிரச்சனை மற்றும் மலச்சிக்கல், வாய்ப் புண், வாயு பிரச்சனைகள் சரியாகும்.

வாழைப் பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும்.

வாழைப்பழம் – Banana

வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், இருதய நோய் மற்றும் பக்கவாத நோய்கள் நம்மை நெருங்கவே நெருங்காது.

வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.

செவ்வாழை பழத்தை உட்கொண்டால் சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு ஆகிய தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

மட்டி பழத்தை உட்கொண்டால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

நேந்திரம் பழத்தை உட்கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது குறையும்.

பச்சை வாழைப்பழத்தை உட்கொண்டால் உடலில் உள்ள பித்தமானது சரியாகும்.

ரஸ்தாளி வாழைப்பழத்தை உட்கொண்டால் உறக்கம் நன்றாக வரும்.

வாழை இலை -Banana leaf in tamil

வாழை இலையில் ( banana leaf in tamil ) சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

வாழை இலை சாறைப் பருகினால், இருமல், சுவாச பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு, முகப்பரு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

வாழை இலையில் சாப்பிட்டால் புற்றுநோயனாது  வாராது.

வாழை இலையில் சாப்பிட்டால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.

வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.

வாழையின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

30 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? – Udal Edai Athikarikka -weight increase food in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top