என்றும் இளமையாக இருக்கலாம் இந்த வல்லாரைக் கீரையால் – vallarai keerai benefits in tamil

vallarai keerai benefits in tamil

vallarai keerai benefits in tamil- இன்று பெரும்பாலும் அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று மறதி. இந்த மறதியைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் கீரையாக வல்லாரை உள்ளது. வாரம் இருமுறை வல்லாரைக் கீரையை உட்கொண்டால் போதும் நினைவு திறனாது அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் இக்கீரையை உண்டால் சிறந்த அறிவாளியாக ஆவது உறுதி. 

வல்லாரைக் கீரையில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் தாது உப்புகள் உள்ளது.

வல்லாரைக் கீரையின் பயன்கள்…

வல்லாரைக் கீரையின் பயன்கள்

இதையும் படிக்கலாமே

 • வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
 • காமாலை நோய் குணமாகும்.
 • கபநோய்கள் குணமாகும்.
 • மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும்.
 • வாய்ப்புண் குணமாகும்.
 • வாய் துர்நாற்றம் சரியாகும்.
 • தோல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும்.
 • மூட்டு வலியைக் குணமாக்கும்.
 • நினைவாற்றலை தர வல்லது.
 • மலச்சிக்கலை சரியாக்கும்.
 • மன அழுத்தத்தைப் போக்கும்.
 • உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
 • இரத்த சோகையைக் குணமாக்கும்.
 • பார்வை திறன் மேம்படும்.
 • பல் சார்ந்த பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

வல்லாரைக் கீரையின் நன்மைகள்…

வல்லாரைக் கீரையின் நன்மைகள்

வல்லாரை கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக திறன் பெருகும்.

வல்லாரைக் கீரையை நிழலில் உலர வைக்கவும். பின்பு அதனை அரைத்து பொடியாக்கி, அந்த பொடியைக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பற்களில் படித்திருக்கும் கறையானது நீங்கும். மேலும், பல் ஈறுகளும் வலிமை அடையும்.

வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையைச் சாப்பிட்டு வந்தால், பார்வைதிறன் அதிகரிக்கும். மேலும், கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், மாலைக்கண் நோய் ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.

வல்லாரைக் கீரையைப் பறித்து, சுத்தம் செய்துவிட்டு காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் குடல் புண் மற்றும் வாய் புண் ஆகியவை சரியாகும்.

வல்லாரை இலை சாறுடன், அரிசி திப்பிலியைச் சேர்த்து ஊற வைக்கவும். பின்பு, அதனை உலர வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நோய், கப நோய்கள் குணமாகும்.

வல்லாரைக் கீரையின் நன்மைகள்

வல்லாரைச் சாறு மற்றும் மணத்தக்காளி சாறு இவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும்.

வல்லாரை இலை மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு, குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

வல்லாரை இலையை அரைத்து புண்களின் மீது தடவினால் புண்கள் ஆறும்.

வல்லாரைப் பொடியுடன், அதிமதுர பொடி சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

வல்லாரைக் கீரையைப் பாலுடன் சேர்த்து கடைத்து சாப்பிட்டால் என்றும் இளமையாக இருக்கலாம்.

வல்லாரைக் கீரையைக் காய வைத்து, பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் செரிமான அமைப்பில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

வல்லாரைக் கீரையின் நன்மைகள்

வல்லாரைக் கீரையில் சட்னி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் சார்ந்த பிரச்சனை குணமாகும்.

வல்லாரைக் கீரையை அரைத்து வீக்கத்தின் வைத்து பற்று போட்டால் வீக்கமானது குறையும்.

வல்லாரைக் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சோகை நோயனாது குணமாகும்.

வல்லாரைக் கீரையைப் பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாலைக்கண் நோய் குணமாகம்.

வல்லாரை இலையை வெறும் வாயில் மென்னு, தின்றால் வாய் புண் குணமாகும்.

வல்லாரைக் கீரையின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம் – மூட்டு வலி நீங்க உணவுகள் -Mootu Vali Treatment in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top