தமிழ் நகைச்சுவை விடுகதைகள்-vidukathai in tamil-vidukathai in tamil with answer

vidukathai in tamil

இயற்கை பொருட்கள் பற்றிய விடுகதைகள் – vidukathai in tamil

அலையலையாய் ஆடிவரும் கடலும் அல்ல, நிலையாக இருக்காது நிலவும் அல்ல, அது என்ன?

விடை – மேகம்

ஆணை ஏறாத மலையில், ஆடு ஏறாத மலையடி, ஆயிரம் பூ பூத்திருக்கு, அது என்ன?

விடை – விண்மீன்

உருவம் இல்லாத மனிதன் உலகமெல்லாம் சுற்றுகிறான். அது என்ன?

விடை – காற்று

பொழுது போனால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம். அது என்ன?

விடை – வானம்

ஊருக்கெல்லாம் ஒரே கூரை, அது என்ன?

விடை – வானம்

இரவெல்லாம் பூக்காடு, பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?

விடை – வானம்

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer

எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவால். அது என்ன?

விடை – நிலா

கண்சிமிட்டி, மணி அடித்து, கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் யார்?

மின்னல், இடி, மழை,

ஓடோடும் சங்கிலி, உருண்டோடும் சங்கிலி, பள்ளத்தை கண்டால் பாய்ந்தோடும் சங்கிலி. அது என்ன?

விடை – தண்ணீர்

தேவையில்லாத விளக்கு, அது என்ன?

விடை – சூரியன்

விலங்குகள் பற்றிய நாம் விடுகதைகள் -vidukathai in tamil

உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான். அது என்ன?

விடை – நாய்

ஒற்றைக்கால் நாராயணன், ஓடை மீன் பிடிக்கிறான். அது என்ன?

விடை – கொக்கு

கால் இல்லாத கள்வன், கால் உள்ளவனை பிடித்தான், தலை இல்லாதவன் அதை பார்த்து கலகலவென்று சிரித்தான். அவர்கள் யார்?

விடை – பாம்பு, தவளை, நண்டு

செடியை உலுக்குகிறது ஒரு குருவி, செடியோடும் போகுது ஒரு குருவி, குட்டையை குழப்பது ஒரு குருவி, குட்டையோரம் போகுது ஒரு குருவி. அவர்கள் யார்?

விடை – வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை, பசு.

தமிழ் விடுகதைகள் 400 with answer

தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவி பாயுது ஒரு கப்பல். அது என்ன?

விடை – ஒட்டகம்

இருட்டில் எழுவார் எங்கள் தாத்தா, பானையை உருட்டுவார் தாத்தா. அது என்ன?

விடை – பூனை

உச்சாணி மரத்திலே உயர்ந்த கிளையிலே பட்டாணி இருந்து பார்த்து விட்டது. அது என்ன?

விடை – அணில்

பாரினில் பரவாத கொக்கு, பாயாத வேங்கை. அது என்ன?

விடை – குதிரை

கணக்கால் தண்ணீரில் கரடி நீச்சல் போடுது. அது என்ன?

விடை – தவளை

பறவைகள் பற்றிய விடுகதைகள் -vidukathai in tamil

அத்திக்கட்டை முல்லெடுத்து அடைப்பாருமில்லை. அழகான பூ எடுத்து முடிபாரும் இல்லை. அது என்ன?

விடை – சேவல்

அது ஓர் அழகு தேவதை. ஆடும் தேவதை. அது என்ன?

விடை – மயில்

அவள் ஒரு பாடகி, ஆனால் பெண்ணல்ல. அது யார்?

விடை – குயில்

அம்பாளத்தில் ஆடும் அழகு கண்ணன். அது என்ன?

விடை – மயில்

தங்க உக்காரி தரமான ஆட்டக்காரி, மேகம் இரண்டும் வந்தால் மோகம் கொண்டு ஆடுவாள், அங்கம் முழுதும் தங்க நிறம். அது என்ன?

விடை – மயில்

பகலில் துயிலுவான், இரவில் அலறுவான். அது என்ன?

விடை – ஆந்தை

தமிழ் விடுகதைகள் 400 with answer

கருப்பு சட்டை அணிந்தவன். கபடம் அதிகம் உள்ளவன். கூவி அழைத்தால் வந்திடுவான். தன் கூட்டம அனைத்தும் சேர்த்திடுவான். அது என்ன?

விடை – காகம்

பட்ட மரத்தில் பச்சை. அதிலும் சிவப்பு. அது என்ன?

விடை – கிளி

மாளிகை வசிப்பான். மன்னன் அல்ல, கூட கோபுரத்தில் இருப்பான். கடவுள் அல்ல, அது என்ன?

விடை – மாடப்புறா

குட்டியும் போடும். குவளையத்திலும் பறக்கும். அது என்ன?

விடை – வவ்வால்

தாவரங்கள் பற்றிய விடுகதைகள் -vidukathai in tamil with answer

பரந்த காட்டேரிக்கு பக்கமெல்லாம் சடை. அது என்ன?

விடை – ஆலமரம்

ஓஹோ ராசா உயர்ந்த ராசா தோள்மேல் என்ன 90 முடிச்சு. அது என்ன?

விடை – தென்னை

ஆழகுழி வெட்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. அது என்ன?

விடை – தென்னை

அம்மி குழி போல் இருக்கும். அரிவாள் பிடிப்போல் காய் காய்க்கும். அது என்ன?

விடை -வாழை

மரமுண்டு அடுப்பு எரிக்க, விறகுமாகாது, சீப்புண்டு தலையை சீவ முடியாது, பூ உண்டு கொண்டையிலே முடிக்க முடியாது. அது என்ன?

விடை -வாழை

தமிழ் விடுகதைகள் 400 with answer

கத்தி போல் இலை இருக்கும். கவரிமான் பூ பூக்கும். தின்ன பழம் பழுக்கும். தின்னாத காய் காய்க்கும். அது என்ன?

விடை -வேப்பமரம்

ராசா மகள் பூ இல்லாமல் சடை போட மாட்டார். அவள் யார்?

விடை -முருங்கை

அவரோ பெரியவர் அவர் இலையும் சிறியது. அவர் பெற்றதெல்லாம் கோணல். அது என்ன?

விடை -புளியமரம்

அவிழ்த்து தலைமுடியாத சிறுக்கி. அவள் பெற்ற பிள்ளைகளுக்கு வகைவகையாய் பெயராம். அது என்ன?

விடை -பனைமரம்

அடி மலர்ந்து நுனி மலராத பூ பூக்கும். அது என்ன?

விடை -வாழை

செடிகள் பற்றி விடுகதைகள் -vidukathai in tamil with answer

மரத்தில் மர முளைத்து மக்க சக்கரம் பழம் பழுத்து எடுப்பார் உண்டு. திண்பார் இல்லை. அது என்ன?

விடை -காஃபி

மாடிமேல் மாடி கட்டி குடியிருக்கும் மனிதனை தொட்டால் குத்திடுவான். அவன் யார்?

விடை -சப்பாத்திக்கள்ளி

பல்லில்லாத வெள்ளையன் காட்டிலேயும் வீட்டிலேயும் வாய்விட்டு சிரிக்கிறான். அது என்ன?

விடை -பருத்தி

மண்ணுக்குள்ளே பொன்னம்மாள். அது என்ன?

விடை -மஞ்சள்

காய்கள் பற்றிய விடுகதை -vidukathai in tamil with answer

கடைக்கு போனேன் ஒருவனை கண்டேன். கண்டவுடன் கொண்டேன். கொண்டவுடன் அடித்தவுடன் அழிந்தான். அழுதவுடன் சிரித்தான். சிரித்தவுடன் கடித்தேன். அது என்ன?

விடை -தேங்காய்

பெரிய பெரிய கடாரங்காய் போல காய் காய்க்கும். அது என்ன?

விடை -பூசணிக்காய்

பச்சைக்கிளி பறக்க முடியாத கிளி கொம்பிலே இருக்கும் குள்ளக்கிளி. அது என்ன?

விடை -மாங்காய்

செடியை சுற்றி செந்தூருக்கம். அது என்ன?

விடை -மிளகாய்

ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?

விடை -கத்திரிக்காய்

பழங்கள் பற்றிய விடுகதை – தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

எங்கள் வீட்டு தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊஞ்சலாடுகிறது. அது என்ன?

விடை -எலுமிச்சம்பழம்

அடி அடி என்று அடித்து உறி உறி என்று உடைத்து உள்ளிருப்பது எடுத்துக்கொண்டு மேலே இருப்பது எரிந்து விட்டேன். அது என்ன?

விடை -புளியம்பழம்

அட்டை கரி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?

விடை -பனம்பழம்

அப்பன் சொரியன், ஆத்தாள் சடைச்சி, குழந்தைகள் சக்கரகட்டி. அது என்ன?

விடை -பலாப்பழம்

தமிழ் விடுகதைகள் 400 with answer

பூத்த போது மஞ்சள் பூத்ததும் சிவப்பு காய்ந்த போது சிவப்பு காய்ந்தும் கருப்பு. அது என்ன?

விடை -ஈச்சம் பழம்

செம்பு நிறைய சிவப்பு முத்து. அது என்ன?

விடை -மாதுளம் பழம்

கொடுக்கையில் நிறைய வைரமணி. அது என்ன?

விடை -மாதுளம் பழம்

தானியங்கள் பற்றிய விடுகதை – தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

அடிகாட்டில் நடு மாட்டில் நுனி வீட்டில். அது என்ன?

விடை -நெல்

நடுக்காட்டில் ஈட்டி. அது என்ன?

விடை -கம்பு

ஒற்றைக்கால் குருவி உழுக்குமுட்டையிடும். அது என்ன?

விடை -சோளம்

இவ்வளவு உண்டு இராமனுக்கு அவ்வளவு உண்டு நாமமும். அது என்ன?

விடை -உளுந்து

உடல் உறுப்புகள் பற்றிய விடுகதை -தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

அக்கா தங்கை உறவுண்டு அண்டை அண்டை வீடுண்டு கிட்ட கிட்ட கிட்ட வந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாது. அது என்ன?

விடை -கண்கள்

ஒரு ஜான் குட்டை இலை ஒரு முழவால். அது என்ன?

விடை -நாக்கு

ஒரு கட்டு துறையில் 32 வெள்ளை பசுக்கள். அது என்ன?

விடை -பற்கள்

அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும். அது என்ன?

விடை -உதடு

இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம். அது என்ன?

விடை -மூக்கு

தமிழ் விடுகதைகள் 400 with answer

ஆற்றிலே பத்து மரம் அசையுது பிடுங்க முடியவில்லை. அது என்ன?

விடை -கைவிரல்கள்

எந்நேரமும் கொட்டும் சத்தம் கேட்காது. அது என்ன?

விடை -தனிமை

அங்கம் இங்கு அலைவது இரண்டு. பக்கம் பக்கமாய் பார்ப்பது இரண்டு. கண்ணொளி தன்னை கேட்பது இரண்டு. எட்டி எடுத்து கொள்வது இரண்டு. அது என்ன?

விடை -கால், கண், காது, கை .

சொன்னதைக் கேட்பான் சொல்ல சொல்ல கேட்பான் திரும்ப சொல்ல மாட்டான். அது என்ன?

விடை -காது

மஞ்சள் பெட்டி மரக்கால் பெட்டி ஒரு காலம் திறக்காபெட்டி. அது என்ன?

விடை -வயிறு

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

கனவுகளின் பலன்கள் -கனவு பலன்கள் – kanavu palangal in tamil

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top