இரண்டே நாளில் நகசுத்தியைக் குணமாக்க வேண்டுமா?-நகசுத்தி வீட்டு வைத்தியம் -Naga Suthi

நகசுத்தி வீட்டு வைத்தியம்

Naga Suthi-நகச்சுத்தியால் மக்கள் பெரிதும் அவதிப்படுவதுண்டு. நகச்சுத்தி வந்தால், எந்த வேலையும் செய்ய முடியாது. நகச்சுத்தி வருவதற்கான காரணத்தையும், அதை குணப்படுத்து வழிமுறைகளைப் பற்றியும் காண்போம்.

நகசுத்தி வருவதற்கான காரணங்கள்…

நகசுத்தி வந்தால் நகமானது மிகுந்த வலியைக் கொடுக்கும். நக இடுக்கில் சேரக்கூடிய அழுக்கின் காரணமாக நகசுத்தி வருகிறது. மேலும், நகத்தைக் கடிப்பதாலும், நகத்தை வெட்டும்போது மிக சதையோடு சேர்த்து வெட்டுவதாலும் நகசுத்தியானது வருகிறது. நகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் நகசுத்தியானது வரவிடாமல் தடுக்கலாம்.

நகசுத்தியை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்…

நகசுத்தி வீட்டு வைத்தியம்

மஞ்சள்

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை  நகசுத்தி உள்ள விரலில் சொருகினால் நகசுத்தி குணமாகும்.

பாலாடை

பாலாடையை நகசுத்தியின் மேல் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நகசுத்தியானது குணமாகும்.

மருதாணி

மருதாணி இலையை அரைத்துக்கொள்ளவும்.  அதனை நகசுத்தியின் மேல் தடவினால் நகசுத்தியானது குணமாகும்.

மஞ்சள்

பூண்டை அரைத்துக்கொள்ளவும்.  அத்துடன் மஞ்சள் கலந்து, நகச்சுத்தி உள்ள இடத்தில் வைத்து கட்டு கட்டினால் நகசுத்தியானது குணமாகும்.

மருதாணி

வேப்பிலை மற்றும் மருதாணி இலைகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையை நகசுத்தியின் மீது தடவி வந்தால் நகசுத்தியானது குணமாகும்.

வசம்பு

சின்ன வெங்காயத்தை நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். அத்துடன், மஞ்சள், வசம்பு, சுக்கு, எலுமிச்சை சாறு கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை நகசுத்தியின் மீது தடவி வந்தால் நகசுத்தியானது குணமாகும். ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் நகசுத்தியானது குணமாகும்.

வேப்பிலை

வேப்பிலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன், அதிமதுரப்பொடியைக் கலந்து நகசுத்தியின் மீது தடவி வந்தால் நகசுத்தியானது குணமாகும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்துக்கொள்ளவும். இதனை,  நகசுத்தியின் மீது தடவி வந்தால் நகசுத்தியானது குணமாகும்.

கல் உப்பு

கல் உப்பை நீரில் போட்டுக்கொள்ளவும். கல் உப்பு கரைந்தவுடன், அந்த தண்ணீரில் கையை விட வேண்டும். 10 நிமிடம் கையை அந்த உப்பு கலந்த தண்ணீரில் வைக்க வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் நகசுத்தியானது குணமாகும்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயை நகச்சுத்தி உள்ள இடத்தில் தடவி வந்தால், நகசுத்தியானது குணமாகும்.

இதையும் படிக்கலாமே

அருகம்புல்லின் மருத்துவக்குணங்கள்- Arugampul Juice Benefits in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top