தொண்டை வலி நீங்க பாட்டி வைத்தியம்- Throat constriction in Tamil

Throat constriction in Tamil – தொண்டை வலி நீங்க பாட்டி வைத்தியம்தொண்டையில் கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவை தொண்டைக் கட்டின் அறிகுறியாகும். மழைக்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தொண்டைக்கட்டால் அவதிப்படுகின்றனர். தொண்டைக்கட்டை வீட்டில் உள்ள பொருட்களை  வைத்தே குணப்படுத்தலாம்.

குரல் மாற்றம் காரணம்

குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் குரலில் மாற்றம் உண்டாகலாம். தொண்டைக்கு எரிச்சல் தரக்கூடிய பானங்களை குடித்தாலும், குரல்வளையில் காயம் உண்டாகி, குரலில் மாற்றங்களை ஏற்படுத்தும். குரலில் மாற்றம் ஏற்படுவதற்குப் புகைபிடித்தல்  காரணம். அடுத்து, இரைப்பையில் புண் ஏற்படுவது.

தொண்டைக்கட்டைக்  குணப்படுத்தும் வழிமுறைகள் – தொண்டைக்கட்டு பாட்டி வைத்தியம்

வால்மிளகு – 10, கிராம்பு – 5, ஏலக்காய் – 5, சுக்குப் பொடி அரை டீஸ்பூன் எடுத்து, நீர் விட்டு கொதிக்க வைத்து, வைத்துக் கொள்ளுங்கள். இதை காலை, மதியம், மாலை என, தேன் சேர்த்துக் குடித்தால், தொண்டைக்கட்டு நீங்கும். குரலில் நல்ல மாற்றம் தெரியும்.

மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியுடன் மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, கொதிக்க விட்டு, இறக்கி கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால்,  தொண்டைக்கட்டு நீங்கும். குரலில் நல்ல மாற்றம் தெரியும்.

Throat pain home remedies – தொண்டைக்கட்டு பாட்டி வைத்தியம்

சித்தரத்தை என்ற மூலிகை பொருளை வாயில் போட்டு மென்று தின்றால் தொண்டைக்கட்டு குணமாகும்.

பூண்டினை அரைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பு ஆகியவை குணமாகும்.

பாலில் மா இலை சாறு, தேன் மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

கிராம்பு, இஞ்சி, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்து தேநீரில் கலந்து குடித்தால் தொண்டை கட்டு சரியாகும்.

காய்கறி மற்றும் மட்டன் சூப்பை மிதமான சூட்டில் குடித்து வந்தால், தொண்டைக்கட்டு குணமாகும்.

புதினா, அதிமதுரம், இஞ்சி, இலவங்கப்பட்டை ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி, தேநீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும். பாலுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டு வந்தால், தொண்டை புண் சரியாகும். மேலும், தொண்டை

இதையும் படிக்கலாமே

காது வலி நீங்க பாட்டி வைத்தியம்- Kathu Vali Treatment

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top