தக்காளியின் மருத்துவ பயன்கள்-Tomoto

Tomoto- தக்காளியில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. தக்காளியைச் சமைத்தோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடலாம். நன்றாக பழுத்த தக்காளியில் அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து ஆகியவை உள்ளது.  

மேலும், தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும் உள்ளது. தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம்  உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. தக்காளி மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. தக்காளி சரும நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

தக்காளியின் மருத்துவ பயன்கள்

தக்காளி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் எரிச்சல் குணமாகிறது. சிறுநீரில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. கிருமிகள் அண்டாமல் தடுக்கிறது. தக்காளி வாய்ப் புண், வயிற்றுப்புண், குடற்புண், தொண்டைப்புண்ணை ஆற்றக்கூடியது. தக்காளி நரம்புத்தளர்ச்சியைப் போக்கி எலும்பையும் பலப்படுத்தும் ஆற்றலை உடையது. தக்காளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். தக்காளியை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சத்துகள் நீங்குவது இல்லை.

தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வைக் கோளாறுகள் உண்டாக்காமல் தடுக்கிறது. மேலும், எளிதில் செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. தக்காளியில் மாவுச்சத்து இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.

இதையும் படிக்கலாமே-

புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள -Punnai tree

Share this post

1 thought on “தக்காளியின் மருத்துவ பயன்கள்-Tomoto,”

  1. Pingback: பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்…-Peerkangai benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top