தும்பையின் மருத்துவக்குணங்கள் – Thumbai Poo Benefits 

Thumbai Poo

தும்பை

தும்பையில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக தும்பை உள்ளது. தும்பை வேர் , இலை, மலர், தண்டு என அனைத்துமே மருத்துவக்குணங்களை உள்ளடக்கியது ஆகும். தும்பையின் மருத்துவக் குணத்தைக் காண்போம்.

இதயம் வலிமையாக -Thumbai Poo Benefits

தும்பை இலையை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன், முசுமுசுக்கைச் சாறு மற்றும் வல்லாரைச் சாறு இவற்றில் சீரகத்தைப் போட்டுக்கொள்ளவும். இதனை, கொதிக்க வைத்து பருகி வந்தால் இதயம் வலிமையாகும். இதயம் சார்ந்த நோய்கள் நீங்கும்.

தோல் சார்ந்த நோய்கள் -Thumbai Poo Benefits

தும்பை வேரை அரைத்துக்கொள்ளவும். அத்துடன், மருக்காரை வேரையும் அரைத்துக்கொள்ளவும். இதனை,  உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

பலம் அதிகரிக்க -Thumbai Poo Benefits

தும்பைப் பூவை அரைத்துக்கொள்ளவும். மேலும்,  ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொள்ள  வேண்டும். இதனை, பசும் பால் உடன் சேர்த்து, பருகினால் பலம் அதிகரிக்கும்.

பார்வைத்திறன் அதிகரிக்க -Thumbai Poo Benefits

தும்பைப் பூவைப் பறித்துக்கொள்ளவும். அத்துடன், நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றை அரைத்து இமைகளில் கண்மையாக தடவினால், வெண்படலம்  குணமாகும். பார்வைத்திறன் அதிகரிக்கும்.

விக்கல் -Thumbai Poo Benefits

தும்பைப் பூவைப் பறித்துக்கொள்ளவும். அதனை பசும்பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதனை சாப்பிட்டு வர விக்கல் குணமாகும்.

விஷக்கடி குணமாக -Thumbai Poo Benefits

தும்பை இலையைப் பறித்துக்கொள்ளவும்.  அதனுடன், மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை சாப்பிட்டால் விஷக்கடி குணமாகும்.

இதையும் படிக்கலாமே

அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள் -ashwagandha benefits….

Share this post

2 thoughts on “தும்பையின் மருத்துவக்குணங்கள் -Thumbai Poo Benefits”

  1. Pingback: பற்கள் பளிச்சிட - பல் கறை- Teeth Whitening at Home in Tamil

  2. Pingback: மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்….-mookirattai keerai benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top