Sirukeerai benefits – சிறுகீரையின் மருத்துவக்குணங்கள்

Sirukeerai benefits

Sirukeerai benefits-சிறுகீரையில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. மேலும், சிறுகீரையில், சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. சிறுகீரை மெல்லிய தோற்றமுடையது. சிறுகீரையின் மருத்துவக்குணத்தைக்  காண்போம்.

பார்வை தெளிவாக -Sirukeerai benefits

சிறுகீரையில் வைட்டமின் எ சத்து அதிகம் நிறைந்துள்ளது. சிறுகீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கண்களில் கண்புரை உருவாது குறைகிறது.  கண் சார்ந்த நோய்கள் குணமாகிறது. உடலானது குளிர்ச்சி பெறுகிறது. பார்வை தெளிவாக உதவுகிறது சிறுகீரை.

இரத்த அழுத்தம் – Sirukeerai benefits

சிறுகீரை பொரியலாகச் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மேலும், சிறுகீரை பொரியலுடன் திணை அரிசி சாதம் சேர்த்து மதிய உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும். இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் – Sirukeerai benefits

சிறுகீரையைச் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு நார்ச்சத்தானது கிடைக்கும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். செரிமான கோளாறு நீங்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

இரத்தசோகை – Sirukeerai benefits

Sirukeerai benefits

சிறுகீரையில் இரும்புசத்து அதிகமாக உள்ளது. சிறுகீரையை அதிகமாக  சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும்.  இரத்தசோகை  வராமல் தடுக்கும். இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

தோல் சார்ந்த நோய்கள் – Sirukeerai benefits

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக்கொள்ளவும். அதனை நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் தோல்  சார்ந்த நோய்கள் குணமாகும்.

உடல் வலிமை – Sirukeerai benefits

துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து சிறுக்கீரையை நெய்யில் வதக்கிக்கொள்ளவும். பின்னர், நன்றாக கடைந்துக்கொள்ளவும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாக இருக்கும்.

சிறுநீரக கோளாறு – Sirukeerai benefits

சிறுகீரையைச்  சமைத்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கோளாறு முழுவதுமாக நீங்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

இதையும் படிக்கலாமே-

தொட்டால் சிணுங்கியின் மருத்துவப் பயன்கள் – Thotta chinungi plant

Share this post

2 thoughts on “சிறுகீரையின் மருத்துவக்குணங்கள்- Sirukeerai benefits”

  1. Pingback: அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள்… -Arai keerai benefits

  2. Pingback: பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள்… -ponnanganni keerai benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top