பழமொழிகள் தமிழ் விளக்கம்-தமிழ் பழமொழிகள் விளக்கம்-Proverb in english and tamil-Proverbs in tamil-proverbs meaning in tamil

Proverb in english and tamil

பழமொழிகள் தமிழ் விளக்கம்- Proverb in english and tamil-proverbs meaning in tamil

 1. வீட்டையும் நிலத்தையும் விடக் கற்பது மேல் , கல்வியே சிறந்த செல்வம். (Learning is better than house and land)
 2. இளமையிற கல் நேர்மையைக் கல். (Learn young learn fair)
 3. உன் தவறுகளிலிருந்து நீ கற்றுக்கொள். (Learn from your mistakes)
 4. கல்லாதவன் எதையும் தெரிந்து கொள்ளாதவன். (Learn not and know not)
 5. கல்வி மனிதனைத் தனக்கே தகுந்த தோழனாக்கும். (Learning makes a man fit companion for himself)
 6. கற்பதற்கு வயது கிடையாது. (It is never too late to learn)
 7. கற்பிக்கும் போதே கற்கிறார்கள். (Even while they teach they learn)
 8. கற்றல் மனத்தைத் தூய்மைப்படுத்தி உயர்த்தி விடும். (Learning refines and elevates the mind)
 9. கற்றவன் அதை விட்டுவிட அல்லல்படுவான். (He who has learned unlearns with difficulty)
 10. கேள்விகள் கேட்பவனே படிப்பாளி ஆகிறான். (A man becomes learned by asking questions)
 11. துன்பப்படாமலும் அவமானப்படாமலும் எவரும் கற்க முடியாது. (No man learns but by pain or shame)
 12. தோற்பதால் கற்கிறோம். (One learns by failing)
 13. நல்லது செய்யும் ஊதாரித்தனத்தைக் கற்றுக் கொள். (Learn the luxury of doing good)
 14. நன்மையில்லாததைச் செய்ய கற்காதே. (Do not learn to do that from which there is no advantage)
 15. படிப்பாளி எப்போதும் தன்னுள்ளே செல்வத்தைக் குவிப்பான். (The learned man has always riches in himself)
 16. மற்றவர் அனுபவத்தில் கற்பது நன்று. (It is good to learn at other men cost)
 17. மற்றவர் அனுபவத்தில் கற்பது நன்று. (It is good to learn at other men cost)
 18. விரைவில் கற்றது விரைவில் மறக்கும். (Soon learnt soon forgotten)
 19. கல் மனம் போல் பொல்லாப்பில்லை கற்ற மனம்போல் நற்பேறில்லை. (Nothing so much worth as a mind well educated)
 20. கல்விக்கு ராசபாட்டை கிடையாது (வருதப்பட்டால் தான் கற்க முடியும்). (There is no royal road to learning)
 21. கல்வியால் பரவும் நாகரிகம். (Education is the transmission of  civilization)
 22. கல்வியே நாட்டின் முதல் அரண். (Education is the chief defense of a nation)
 23. கற்காதவன் அறியாதவன். (Learn not and know not)
 24. கற்கையில் கசப்பு கற்றபின் இனிப்பு. (Knowledge has bitter roots but sweet fruits)
 25. கற்பதற்கு வயதில்லை(கால எல்லை இல்லை). (Never too late to learn)
 26. தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல்ல பண்பைப் பொலிவுறச் செய்யும். (Education polishes good nature and corrects bad ones)
 27. (i) கடவுள் விரும்பியபடியே அனைவரும் இருப்பர்  (ii) கடவுள் விருப்பப்படியே இங்கு மானிட வாழ்வு. (All must be as God wills)
 28. இயன்றதைச் செய்தால் கடவுளட மிகச் சிறந்ததைச் செய்வார். (Do the likeliest and God will do the best)
 29. கடவுளுக்கு தொண்டு புரிபவனே சிறந்த எசமானனுக்குத் தொண்டு புரிகிறான். (He who serves God serves a good master)
 30. கடவுளை நம்பினோர் கைவிடப்படார். (God provides for him that trusts)
 31. கடவுள் படைக்கிறார் மனிதன் வடிவமைக்கிறான். (God makes and man shapes)
 32. கடவுள் பெயரைச் சொல்லித் தொடங்கிய காரியம் கெட்டுப் போகாது. (That never ends ill which begins in Gods name)
 33. தமக்குத்தாமே உதவுபவருக்குக் கடவுள் உதவுகிறார். (God helps them that help themselves)
 34. தூரத்தில் இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது கடவுள் இறுதியில் வருகிறார். (God comes at last when we think He is farthest off)
 35. மனிதன் நினைக்கிறான் கடவுள் முடிக்கிறார். (Man proposes God disposes)
 36. மனிதன் முடிந்ததைச் செய்கிறான் கடவுள் விரும்பியதைச் செய்கிறார். (Man does what he can ang God what he will)
 37. மனிதன் விரும்புகிறான் கடவுள் முடிவு செய்கிறார். (Man desires God decides)
 38. i) வாலிபத்தை நன்கு ஆண்டால் வயோதிகம் தானே ஆளும் (ii) வாலிபத்தைக் கட்டுப்படுத்தினால் வயோதிகம் தானே கட்டுப்படும். (Rule youth well and age will rule itself)
 39. எசமான் தூங்கு மூஞ்சியானால் வேலைக்காரன் மட்டி. (A sleepy master makes his servant a lout)
 40. சிறு தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிடடால் பெறுந்தவறுகளைத் தவிர்க்க முடியாது. (He that corrects not small faults will not control great ones)
 41. தன்னைக் கண்டித்துத் கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். (Happy is he that chastens himself)
 42. பரிசுகளும் தண்டனைகளும் பாதுகாப்பு அரண்கள். (Rewards and punishments are the walls of a city)
 43. முரட்டுக் குதிரைக்கு வலுத்த கடிவாளம். (A boisterous horse must have a rough bridle)
 44. உண்மை வெற்றி உழைப்பிற்கே. (The true success is to labour)
 45. உழைக்கக் கற்போம் காத்திருக்கவும் கற்போம். (Let us learn to labour and to wait)
 46. உழைப்பே அனைத்தையும் வெல்லும். (Labour conquers everything)
 47. உழைப்பே வழிபாடு (ஆராதனை). (Labour is worship)
 48. உழைப்பைத் துருப்பிடிக்க வைக்காதே. (Spare not your labour)
 49.  i) உடல்நலமே மகிழ்ச்சி (ii) ஆரோக்கியமே ஆனந்தம். (Health is happiness)
 50. (i) நலவாழ்வே நற்செல்வம் (ii) உடல்நலம் உயர் செல்வம் (இ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (Health is wealth)
 51. (i) நோய்வரும் வரை நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை (ii) நோய் வராதவரை உடல் நலத்திற்கு மதிப்பில்லை. (Health is not valued till sickness comes)
 52. ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை பாழ். (Without health life is not life life is useless)
 53. உடல்நலத்துடன் இருக்கையிலேயே நோய் பற்றிப் படி. (Study sickness while you are well)
 54. உடல்நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்றுத்தரும். (Health and cheerfulness mutually beget each other)
 55. உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள். (Health and understanding are two great blessings of life)
 56. நேரத்தே எழுந்து காலத்தே உண்டு நேரத்தே உறங்கினால் நூறாண்டு வாழலாம். (To rise at five dine at nine sup at five go to bed a nine makes a man live to ninety nine)
 57. நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். (He who masticates well lives up to a hundred full)
 58. வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது. (It is a hardened head that never ached)
 59. அனுபவமே அருமையான ஆசான். (Experience is the best teacher)
 60. அனுபவமே அறிவின் தாய். (Experience is the mother of wisdom)
 61. அனுபவம் பிழைகளைச் செய்தபின் மெதுவாகக் கற்பிக்கிறது. (Experience teaches slowly and at the cost of mistakes)
 62. கல்வியில்லாத அனுபவம் அனுபவம் இல்லாத கல்வியைவிட மேல். (Experience without learning is better than learning without experience)
 63. காயம் ஆறினாலும் தழும்பு நிற்கும். (Though the wound be healed yet a scar remains)
 64. செய்வதில் நாம் கற்கிறோம். (In doing we learn)
 65. மற்றவர்கள் தவறுகண்டு தான் கற்பதே நல்லது. (It is good to learn at other men cost)
 66. (i) செய்கை வரும் முன்னே அறிவுரை வரும் பின்னே (ii) செய்து முடித்தபின் சேர்ந்திடும் அறிவுரை. (When a thing is done advice comes too late)
 67. அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும். (Too much consulting confounds)
 68. அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது. (It is safer to hear and take counsel than to give it)
 69. அறிவுரை தேவைப்படும் பொழுதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும். (Advice when most needed is least heeded)
 70. அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள். (Accept if the counsel be good no matter who gave it)
 71. அறிவுரை போல இலவசம் வேறெது? (Nothing is given so free as advice)
 72. உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே. (Give neither advice nor salt till you are asked for it)
 73. உன்னை நேசிப்பவனின் அறிவுரையை தற்போது கொள்ளாவிடினும் பிற்போது கொள்ள அதை எழுதி வைத்திடு. (write down the advice of him who loves you though you like it not at present)
 74. கும்பலில் அறிவுரை ஒருபோதும் கூறாதே (Never give advice in a crowd)
 75. நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது. (It is hard to follow good advice than to give it)
 76. நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது. (Good counsel has no price)
 77. நல்ல அறிவுரைக்கு நாடிடு கிழவனை. (If you wish good advice consult an old man)
 78. போருக்குப் போவென்றும் திருமணம் புரியென்றும் யாருக்கும் அறிவுரை கூறாதே (Never advise anyone to go to war or marry)
 79. முற்றிய பிறகு பெற்ற அறிவுரை தந்திடும் வேதனை. (Counsel is irksome when the matter is past remedy)
 80. விவேகம் எச்சரிக்கும் அவிவேகம் செயல்படும் (While the discreet advise the fool does his business)
 81. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும். (A little learning is a dangerous thing)
 82. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு. (Zeal without knowledge is fire without light)
 83. அறிவு அனைத்து நற்பண்புகளின் தாய் அறியாமையிலிருந்து அனைத்து தீயபண்புகளும் வெளிப்படுகின்றன. (Knowledge is the mother of all virtues. All vice proceeds from ignorance)
 84. அறிவு ஏழைகளிடையே வெண்பொன் பிரபுக்களிடையே செம்பொன் மன்னரிடையே அணிகலன். (Knowledge is silver among the poor gold among the nobles and jewel among princes)
 85. அறிவு ஒரு சுமை அன்று. (Knowledge is no burden)
 86. அறிவு தன் விலை அறியும். (Knowledge finds its price)
 87. அறிவு மட்டுமே அழியா அணிகலம். (The only jewel which will not decay is knowledge)
 88. அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது. (Knowledge comes but wisdom lingers)
 89. அறிவே ஆற்றல். (Knowledge is power)
 90. அறிவே நன் மனிதனைத் தொடங்கி வைக்கிறது ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது. (Knowledge begins a gentleman but it is knowledge that completes him)
 91. அறிவைப் பெருக்குபவன் துயரத்தைப் பெருக்குவான். (He who increases knowledge increases sorrow)
 92. அனுபவமில்லாத அறிவு அரைக் கலைஞனையே உருவாக்கும். (Knowledge without practice makes but half an artist)
 93. ஐயமே அறிவின் திறவுகோல். (Doubt is the key of knowledge)
 94. ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம். (Science is organized knowledge)
 95. கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும். (Art and knowledge bring bread and honor)
 96. நம் அறிவில் பாதியை நாம் அல்லல்பட்டு பெற வேண்டும் சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (Half our knowledge we must snatch not take)
 97. நம்மை அறிவதே நமக்கறிவாகும். (All our knowledge is ourselves to know)
 98. மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கும் வேற்றுமை இல்லை. (Hidden knowledge differs little from ignorance)
 99. i) உன் அதிர்ஷ்டம் உனக்கு தெரியாது (ii) தன் அதிர்ஷ்டம் தனக்குத் தெரியாது. (You never know your luck)
 100. அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. (Lucky man needs no counsel)
 101. அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். (Good luck reaches further than long arms)
 102. அதிர்ஷ்டம் வரும்போது தவறவிடாதே. (When fortune smiles embrace her)
 103. ஆபத்துக்கு உதவுபவனே உண்மையான நண்பன். (A friend in need is a friend indeed)
 104. உழைப்பின் வாரா உறுதிகள் உளவேர் (Diligence is the mother of fortune)
 105. ஒரு கிலோ ஞானத்தைவிட ஒரு கிராம் அதிர்ஷ்டம் மதிப்பானது. (An ounce of luck is worth a pound of wisdom)
 106. குபேரன் குருடன். (Fortune is blind)
 107. செல்வம் செல்வத்தோடு சேரும். (Fortune favours fortune)
 108. துரதிருச்டம் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். (Bad luck often brings good luck)
 109. நிழலருமை வெயிலில் தெரியும். (Misfortune tells us what fortune is)
 110. புத்திசாலியாய்ப் பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாய்ப் பிறப்பது மேல். (Better be born lucky than wise)
 111. முட்டாள் அதிர்ஷ்டம் முட்டும். (Fortune favours fools)
 112. யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் வரும். (Every dog has his day)
 113. வீரனை அதிர்ஷ்டம் விரும்பிச் சேர்ந்திடும். (Fortune favours the brave)
 114. i) ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடு ஒன்று உண்டு (ii) ஒவ்வொரு குடும்பத்திலும் ஒழுங்கீனன் இருப்பான். (There is a black sheep in every flock)
 115. ஒன்றாக வழிபடும் குடும்பம் ஒரு நாளும் பிரியாது. (The family that prays together stays together)
 116. கோவேறு கழுதையே குடும்பத்தை மறுக்கும். (None but a mule denies his family)
 117. சந்ததி பயன்பெற சால விருட்சம் நடுவோம். (Walnut and pears you plant for your heirs)
 118. சந்தோசமான குடும்பங்கள் ஒன்றுபோல இருக்கும் சந்தோசம் இல்லாவிட்டால் வேறுவேறாய் இருக்கும். (All happy families resemble one another each unhappy family is unhappy in its ones way)
 119. சந்தோசமான குடும்பமே தரணியில் சொர்க்ம். (A happy family is an earlier heaven)
 120. சிறிய குடும்பமே செல்வக் குடும்பம். (A small family is soon provided for)
 121. நாட்டைவிடக் குடும்பம் புனிதமானது. (Family is more sacred than the state)
 122. விதி தேர்வது உறவு நாம் தேர்வது நட்பு (Fate chooses your relations you choose your friends)
 123. i) காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு (ii) எல்லாத் தாய்க்கும் தன் குழந்தையே அழகு. (There is only one pretty child in the world and every mother has  it)
 124. (i) மலடிக்கு வருமா மழலைமேல் அன்பு (ii) பிள்ளை பெறாதவனுக்கு அன்பு தெரியாது. (He that has no children knows not what is love)
 125. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான். (Spare the rod and spoil the child)
 126. இன்றைய குழந்தைகள் நாளைய மனிதன். (The child is the father of man)
 127. எலும்புந் தோலுமாய்க் குழந்தையை வளர்க்காதே. (Let not a child sleep upon bones)
 128. ஒவ்வொருவரும் தன் கடந்த காலத்தின் குழந்தையே, (Everyone is the child of his past)
 129. குழந்தைகளைக் கேட்டறிவதிலும் பார்த்தறிவதே மேல். (Children should be seen and not heard)
 130. குழந்தைக்கும் முட்டாளுக்கும் பொய் சொல்லத் தெரியாது. (Children and fools cannot lie)
 131. குழந்தையின் மீது எதையும் திணிக்காதே அதுவாகப் பற்றம்படி அறிவு கொளுத்து. (A child is not a vase to be filled but a fire to be lit)
 132. குழந்தையும் கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும். ( Children and chicken must always be picking)
 133. சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆவர். (Boys will be men)
 134. மழலைச்செல்வமே ஏழையின் செல்வம். (Children are poor mans riches)
 135. மனைவி வரும்வரையே மகன் வாழ்நாள் எல்லாம் மகள். (A son is a son till he gets him a wife but a daughter is a daughter all the days of her life)
 136. i) உரத்துக் கேட்காதவன் மறுப்பைப் பெறுவான் (ii) உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது. (He that asks faintly begs a denial)
 137. (i) வழி தவறுவதை விட வழிகேட்பது மேல் (ii) வாயுள்ள பிள்ளை வழி தேடிக் காணும். (Better to ask the way than go astray)
 138. (i) தட்டிக்கேட்க ஆள் இல்லாவிடில் தம்பி சண்டப் பிரசண்டன் (ii) ஏனென்று கேட்காவிட்டால் எடுத்து எறிந்து போடுவார்கள். (If you don’t ask why you will be overridden)
 139. கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே. (Lose nothing for want of asking)
 140. கேள் கொடுக்கப்படும் தட்டு திறக்கப்படும். (Ask and it shall be given to you)
 141. கேள்வி கேட்கப்படும் முன் விடையைக் கொடுக்காதே. (Never answer a question until it is asked)
 142. கொஞ்சம் பெற விஞ்சக்(அதிகம்) கேள். (Ask much to have a little)
 143. தாமதங்கள் மறுப்புகள் ஆகா. (Delays are not denials)
 144. (i) மௌனம் கோப அழிவிடம் (ii) துருத்தி தீயை மூட்டும் கோபத்தை மூட்டும். (As fire is kindled by bellows so is anger by words)
 145. உன்னால் உதவ முடியும் போதும் உதவ முடியாத போதும் ஒருபோதும் கோபங்கொள்ளதே. (Two things a man should never be angry at what he can help and what he cannot help)
 146. கேட்பதற்கு விரை பேசுவதற்கு நிதானி கோபத்திற்குச் சுணங்கு. (Be swift to hear slower to speak still slower to wrath)
 147. கோபம் அரைப் பைத்தியம். (Anger is short madness)
 148. கோபம் வருங்கால் பத்து வரை எண்ணு அதிகக் கோபம் எண்றால் நூறு வரை எண்ணு. (When angry count ten when very angry count hundred)
 149. கோபி முடியாததையும் செய்ய முடியும் என நினைப்பான். (The angry man always thinks he can do more than he can)
 150. கோழைகள் பலமுறை மடிவர் வீரனுக்கு மரணம் ஒருமுறைதான். (Cowards die many times but the brave die only once)
 151. கோழைகள் வரலாறு படைப்பதில்லை. (Of cowards no history is written)
 152. தண்டிக்கும் போது கோபம் கொள்ளாதே. (Anger is to be avoided in inflicting punishment)
 153. தன்னையே கொல்லும் சினம். (Anger punishes itself)
 154. அயோக்கியர்களுக்காக ஆக்கப்பட்டதுதான் சட்டம். (Laws were made for rogues)
 155. ஈ யை பிடிக்கும் சட்டம் குளவியைக் கோட்டைவிடும். (Law catches flies and lets hornets to go)
 156. உடைக்கப்படவே ஏற்பட்டது சட்டம். (Laws were made to be broken)
 157. காலைக்கொரு சட்டம் மாலைக்கொரு சட்டம். (The law is not the same at morning and night)
 158. சட்டம் அதிகமானால் நியாயம் குறையும். (The more the laws the less the justice)
 159. சட்டம் இயற்றுவோர் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. (Law makers should not be law breakers)
 160. சட்டம் சட்டத்தைத் தவிர அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. (The law guards us from all evil but itself)
 161. சட்டம் சில சமயம் தூங்கும் ஆனால் ஒருபோதும் சாகாது. (The laws sometime sleep but never die)
 162. சட்டம் பெருகினால் குற்றமும் பெருகும். (The more the laws the more offenders)
 163. சட்டம் மதியால் உருவாக்கப்படுகிறது அதை ஏய்ப்பது சதியால் உருவாக்கப்படுகிறது. (The law devised its evasion contrived)
 164. தண்டிக்க முடியாத சட்டம் இணக்கத்தை ஏற்படுத்தாது. (Law cannot persuade where it cannot punish)
 165. பணக்காரனுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம். (One law for the rich and another for the poor)
 166. பணக்காரன் சட்டத்தை ஆள்கிறான் ஏழை அதில் அடைபட்டுச் சாகிறான். (Laws grind the poor and rich men rule the law)
 167. மன்னன் நெறிப்படியே சட்டம் செல்லும். (Law goes the way king directs)
 168. எல்லாம் நன்மைக்கே. (All is for the best)
 169. ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. (Make the best of a bad bargain)
 170. காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார். (Those that make the best of time have none to spare)
 171. குறைந்த கட்டுப்பாடுகள் உடைய அரசாங்கமே மிகச் சிறந்த அரசாங்கம். (The best government is that which governs least)
 172. சாலச் சிறந்தது நல்லதன் பகையே. (The best is the enemy of good)
 173. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதில் ஐயம் ஏதும் இல்லை. (No doubt everything is for the best)
 174. நல்லது நடக்கும் என நம்பு தீயதை எதிர்கொள்ளத் தயாராயிரு. (hope for the best and prepare for the worst)
 175. அளவு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும். (Too much liberty spoils all)
 176. கொழுத்த அடிமையினும் மெலிந்த சுதந்திரம் மேல். (Lean liberty is better than fat slavery)
 177. சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் உண்டு ஆனால் எல்லைகள் இல்லை. (Liberty has restraints but no frontiers)
 178. சுதந்திரம் எதையும் செய்யும் உரிமம் அன்று. (Liberty is not licence)
 179. சுதந்திரம் என்பது பொறுப்புணர்வு எனவே அதற்கு அநேகர் அஞ்சுவர். (Liberty means responsibility. That’s why most men dread it)
 180. சுதந்திரம் கொடு இல்லையேல் மரணம் கொடு. (Give me liberty or give me death)
 181. i) வாய் ஒன்று சொல்லும் கையொன்று செய்யும் (ii) சொல்வது வேறு செய்வது வேறு. (Saying is one thing and doing another)
 182. இலட்சியமே செயலின் அளவுகோல். (Every deed is to be judged by the doers intention)
 183. உறுதிகள் அளித்து ஒன்றும் செய்யாதவன் புதர் மண்டிய பூங்கா. (A man of words without deeds is like a garden full fo weeds)
 184. கெட்ட செயல்கள் நாற்றம் போல மூடி மறைக்க முடியாதவை. (Evil deeds are like perfume difficult to hide)
 185. கையாலாகாதவன் வாய் கிழியப் பேசுவான். (The greatest talkers are the least doers)
 186. செயலின்றிப் பேச்சினிமை பயன் இன்மை ஆகிவிடும். (Good words without deeds are rushes and reeds)
 187. செயல்களே மனிதனை அடையாளம் காட்டும். (By his deeds we know a man)
 188. செயல்கள் தாம் நிலைக்கும் சொற்கள் மறைந்துபோகும். (Deeds will show themselves and words will pass away)
 189. நற்செயல் என்றும் நிலைத்திருக்கும் (வீண் போவதில்லை). (A good deed is never lost)
 190. நன்மை செய்வதால் நட்டம் ஏதும் இல்லை. (One never loses by doing a good turn)
 191. வார்த்தைகள் வெறும் நீர்க் குமிழ்கள் செயல்களே தங்கத் துளிகள். (Words are mere bubbles of water but deeds are drops of gold)
 192. அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர் சிலரே வேண்டும். (Have but few friends though many acquaintances)
 193. உண்மையான நண்பனே உன்னதச் சொத்து. (A true friend is the best possession)
 194. செல்வம் நண்பர்களை ஆக்கும் வறுமை அவர்களைச் சோதிக்கும். (Prosperity makes friends adversity tries them)
 195. துரதிருச்டம் நட்பைப் பகையாக்கும். (Misfortune make foes of friends)
 196. நண்பர்களுக்கு இடையில் பொதுவுடைமை. (Among friends all things are common)
 197. நண்பனைப் பகைவனாகி விடுவானோ என்பது போல் நடத்து. (Treat a friend as if he might become a foe)
 198. நண்பன் இல்லா வாழ்க்கை துயரில் பங்கு கொள்ள ஆள் இல்லாத சாவு. (Life without a friend is death without a witness)
 199. நண்பன் உதவி கேட்டால் நாளை என்பது இல்லை. (When a friend asks there is no tomorrow)
 200. பொய்யான நண்பர்களைவிட தெரிந்த பகைவன் மேல். (Better an open enemy than a false friend)
 201. i) அனைத்துக்கும் ஆசைப்படு அனைத்தையும் இழ (ii) பேராசை பெரு நட்டம். (All covet all lose)
 202. தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்று விடாதே. (Kill not the goose that lays the golden eggs)
 203. பிச்சைக்காரர்களின் பைகளுக்கு அடிகாண முடியாது. (Beggars bags are bottomless)
 204. பேராசைக்காரர்களுக்குக் கை நீளம். (Greedy folks have long arms)
 205. i) பொறையுடையார் வெற்றியடைவார் (ii) பொறுத்தார் பூமியாள்வார். (He conquers who endures)
 206. ஒரு தவறுக்கு அடி பணிந்தால் மற்றொன்றைக் கூட்டி வரும். (The submitting to one wrong brings another)
 207. ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு. (Patience is remedy for every grief)
 208. நிரம்பி வழிவதற்கு முன் கோணியைக் கட்டு. (Bind the sack before it be full)
 209. நிரம்பிய நீர் வழிந்துதான் போகும். (When the well is full it will run over)
 210. பிறரைச் சுட முயலும் பொறாமை தன்னையே சுட்டுக் கொள்ளும். (Envy shoots at others and wounds herself)
 211. பொறாமை என்றும் மனிதனைச் செழிப்பூட்டியதில்லை. (Envy never enriched a man)
 212. பொறாமை தன் மீதே பொறாமைப்படும். (Envy envies itself)
 213. பொறாமை பார்வையைக் கூராக்கும். (Nothing sharpens sight like envy)
 214. பொறாமைப்படுபவன் தன் தாழ்வைத் தானே ஒப்புக்கொள்கிறான். (He who envies admits his inferiority)
 215. பொறாமையும் சோம்பலும் மணந்தால் பெறுவது விநோதம். (Envy and idleness married together beget curiosity)
 216. பொறுத்திரு காத்திரு. (Bears and forbear)
 217. பொறுமை ஒரு நற்பண்பு. (Patience ia a virtue)
 218. பொறுமைக்கம் ஓர் எல்லையுண்டு. (An ass endures his burden but not more than this burden)
 219. போகாத வலியைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும். (What cannot be cured must be endured)
 220. அமைதியான வாழ்க்கை பெற எதையும் விட்டுக்கொடுக்கலாம். (Compromise anything for a quiet life)
 221. உடைவதைவிட வளைவதுமேல் (Better bend than break)
 222. ஊருடன் ஒத்து வாழ். (Do in rome as the romans do)
 223. மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும். (The best things are hard to come by)
 224. முயலுடன் சேர்ந்தால் ஓடிப்போ நாயுடன் சேர்ந்தால் வேட்டையாடு. (To run with the hare and hunt with the hounds)
 225. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும். (Perseverance kills the game)
 226. விட்டுக்கொடுத்தல் (COMPROMISE)

இதையும் படிக்கலாமே

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer-vidukathai tamil-தமிழ் விடுகதை மற்றும் விடைகள்-Tamil vidukathai

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்-vidukathai in tamil-vidukathai in tamil with answer

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top