கழுத்து கருமை முற்றிலும் நீக்க வேண்டுமா? – Neck Black Remove Tips in Tamil

Neck Black Remove Tips in Tamilஇன்று பெரும்பாலனோர் சந்திக்கும் பிரச்சனை கழுத்து கருமை. கழுத்து கருமையானது நமது அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த கழுத்து கருமையைப் போக்க எவ்வளவோ காசை செலவு செய்தும் பயன் இல்லையா? இனி பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே கழுத்து கருமையை நீக்கலாம்.

கழுத்து கருமை வருவதற்கான காரணங்கள்…

அதிகளவு வெயிலில் அலைவதினாலும், முறையற்ற உணவு பழக்கத்தினாலும், அதிக அளவு நகைகளை அணிவதினாலும், மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதினாலும், சிலருக்கு கர்ப்ப காலத்திலும் கழுத்து கருமை உருவாகிறது. கழுத்து கருமையைப் போக்கும் வழியைக் காண்போம்.

கழுத்து கருமையைப் போக்கும் வழிமுறைகள்…

முட்டைக்கோஸை நன்றாக அரைத்து , அதனை கழுத்து கருமையின் மீது தடவினால் கழுத்து கருமையானது மறையும்.

காய்ச்சாத பசும் பாலுடன் கடலை மாவைக் கலந்து கொள்ளவும். அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறைக் கலந்து கழுத்து கருமையின் மீது தடவவும். பின்னர், அதனை குளிர்ந்த நீரால் கழுவினால் கழுத்து கருமையானது மறையும்.

முட்டைக்கோஸை நன்றாக அரைத்து , அத்துடன் தேன் அல்லது எலுமிச்சை சாறை கலந்து கழுத்து கருமையின் மீது தடவினால் கழுத்து கருமையானது மறையும்.

எலுமிச்சை சாறுடன் சக்கரை கலந்து கழுத்தின் கருமையின் மீது நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் கழுத்து கருமை மறையும்.

பப்பாளி பழத்தோலை கழுத்தின் கருமையின் மீது நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் கழுத்து கருமை மறையும்.

எலுமிச்சை பழத்தோலை கழுத்தின் கருமையின் மீது நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் கழுத்து கருமை மறையும்.

ஆரஞ்சு பழத்தோலை கழுத்தின் கருமையின் மீது நன்றாக தேய்த்து மசாஜ் செய்தால் கழுத்து கருமை மறையும்.

பாலுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, கழுத்தில் தடவி ஊற வைக்கவும். பின்னர் அதனை சுடு தண்ணீரால் கழுவினால் கழுத்து கருமை மறையும்.

பாலுடன் கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயிறு மாவு கலந்து கழுத்து கருமையின் மீது தடவி மசாஜ் செய்தால் கழுத்து கருமையானது மறையும்.

இதையும் படிக்கலாமே

கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்- மலம் எளிதாக வெளியேற பாட்டி வைத்தியம் -Malaccikkal kunamaga

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top