பாரதிதாசன் குறிப்பு-Bharathidasan History in Tamil – About bharathidasan in tamil

Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil – பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், ‘பாரதிதாசன்‘ என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

Bharathidasan History in Tamil

பாரதிதாசன்  இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும்.

பாரதிதாசன் சிறப்பு பெயர்கள்

Bharathidasan History in Tamil

பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

பாரதிதாசன் பெற்றோர் பெயர் in tamil

Bharathidasan History in Tamil

புரட்சிக்கவி பாரதிதாசன், செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.

பாரதிதாசன் பிறந்த ஊர் in tamil

Bharathidasan History in Tamil

பாரதிதாசன்  பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.

பாரதிதாசன் மனைவி பெயர் என்ன?

Bharathidasan History in Tamil

பாரதிதாசன் 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

பாரதிதாசன் இயற்றிய நூல்கள் in tamil -பாரதிதாசன் நூல்கள் யாவை?

Bharathidasan History in Tamil

குடும்ப விளக்கு,

பாண்டியன் பரிசு,

சேர தாண்வம்,

தமிழச்சியின் கத்தி,

பிசிராந்தையார்,

குறிங்சித் திரட்டு,

அழகின் சிரிப்பு,

இளைஞர் இலக்கியம்,

தமிழியக்கம்,

இசையமுது,

கண்ணகி புரட்சி காவியம்.

பாரதிதாசன் பற்றி 10 வரிகள் -Bharathidasan in tamil

Bharathidasan History in Tamil
  1. புதுச்சேரியில் (1891) பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம். திருப்புளிச்சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிரெஞ்சு மொழியும் கற்றார். மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர் பங்காரு பத்தரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சித்தாந்த, வேதாந்தப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.

2. கல்வே கல்லூரியில் பயின்றவர், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு திருமண விழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. அவர் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

3. தமிழ் ஆசிரியராக 1909-ல் பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகள் பணியாற்றினார். பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.

4. புதுச்சேரியில் ஒருமுறை சூறாவளிக் காற்றில் சிக்கி 5 கி.மீ. தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார். இந்த அனுபவத்தை ‘காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அதை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தாராம் அரவிந்தர்.

5. ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரை போலீஸுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். கைத்தறி துணிகளை தெருத்தெருவாக விற்றார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

6. திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார்.

7. பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’ என்று மாற்றியவர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.

8. நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.

9. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

10 புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமான பாரதிதாசன் 1964 ஏப்ரல் 21-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

பாரதிதாசன் சிறப்புகள்

Bharathidasan History in Tamil

தொழிலாளிகளின் மனதில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டு சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவராவார். அதாவது

சித்திர சோலைகளே – எமை இங்கு
திருத்த இப்பாரினிலே
எத்தனை தோழர்கள்,
ரத்தம் சொரிந்தனரே இம் மேதினிலே

என பல புரட்சிகரமான சமூக கருத்துக்களை முன்வைத்து இலக்கிய பணியை மேற்கொண்டவராவார்.

பாரதிதாசன் இலக்கிய பணி pdf

Bharathidasan History in Tamil

பாரதிதாசனது இலக்கிய பணியானது அவரது மறைவிற்கு பின்னரும் நூல் வடிவம் பெற்று இன்றும் போற்றப்பட்டே வருகின்றது.

அதாவது இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், இலக்கிய கோலங்கள், கற்கண்டு என்ற இலக்கியங்களானவை இன்றும் அவரது இலக்கிய பணியையே பறை சாற்றுகின்றது.

இவர் கவிதை, கட்டுரை என பல புதிய கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டமையானது இவரது இலக்கிய பயணத்தின் வளர்ச்சியாகவே திகழ்கின்றது.

இதையும் படிக்கலாமே

பாரதியார் சிறப்புகள் -பாரதியார் பற்றிய குறிப்புகள்- About bharathiyar in tamil

காந்தியடிகள் வரலாறு-மகாத்மா காந்தி வரலாறு pdf – Mahatma Gandhi History in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top