மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை -Green gram ladoo
Green gram ladoo-புரதச்சத்து மிகுந்த பாசிப்பயிறு லட்டை குழந்தைகளுக்குச் செய்து கொடுத்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். பாசிப்பயிறு லட்டு செய்யும் முறையைக் காணலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – இரண்டு கிண்ணம்
சர்க்கரை – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – 5
முந்திரி உடைத்தது – 40 கிராம்
பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை
செய்முறை:
ஒரு வாணலில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். பின்னர், அதில் முந்திரியைப் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலில் பாசிப் பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்னர், ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
அரைத்த மாவை நன்றாக சலித்து கொள்ளவும். மிக்சியில் சர்க்கரையை போட்டு நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் , வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டுக்கொள்ளவும். நன்றாக கலந்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி நன்றாக உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்ற வேண்டும். மாவை வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் நன்றாக லட்டு பிடித்து ஆற விடவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பயிறு லட்டு தயார்.
இதையும் படிக்கலாமே –
சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle
Pingback: எள்ளின் இவ்வளவு மருத்துவக் குணங்களா…-Sesame benefits