தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal
Danam kodukka vendiya porutkal-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. கோவிலில் பல வகையான பொருட்களைத் தனமாக வழங்குவர். மனதில் வேண்டுதலை வைத்து, இறைவனை மனதில் நினைத்து இந்த தானமானது கொடுக்கப்படும். அத்தகைய தானத்தின் சிறப்புகளையும், பயனையும் அறிவோம் வாருங்கள்…
தானமும் அவற்றின் சிறப்பும், பயனும்…
அன்னத்தைத் தானமாகக் கொடுத்தால், வறுமை நீங்கும். கடன் தொல்லை நீங்கும். காரியத்தடை நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
ஆடையைத் தானமாகக் கொடுத்தால், நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியத்துடன், நோய் நொடி இல்லாத வாழ்க்கை அமையும்.
தேனைத் தானமாகக் கொடுத்தால், புத்திர பாக்கியம் கிடைக்கம். பிள்ளைகளால், பேரும் புகழும் கிடைக்கும்.
தீபத்தைத் தானமாகக் கொடுத்தால், கண் பார்வைத் தெளிவாகும். பார்வை சார்ந்த கோளாறுகள் அனைத்தும் விலகும்.
அரிசியைத் தானமாகக் கொடுத்தால், பாவங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் செல்வ வளம் பெருகும். பணக்கஷ்டம் தீரும்.
நெய்யைத் தானமாகக் கொடுத்தால், நோய்கள் அனைத்தும் விலகும். உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
பாலைத் தானமாகக் கொடுத்தால், துன்பங்கள் அனைத்தும் விலகி, இன்பமான வாழ்க்கை அமையும்.
தயிரைத் தானமாகக் கொடுத்தால், மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
பழங்களைத் தானமாகக் கொடுத்தால், சிறந்த கல்வி ஞானமும், கேள்வி ஞானமும் கிடைக்கும். அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.
பொன்னைத் தானமாகக் கொடுத்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வெள்ளியைத் தானமாகக் கொடுத்தால், மனக் கவலைகள் அனைத்தும் விலகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பெருகும்.
பசுவைத் தானமாகக் கொடுத்தால், கடன் தொல்லை முழுவதுமாக நீங்கும். காரியத்தடை அனைத்தும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
தேங்காயைத் தானமாகக் கொடுத்தால், நினைத்த காரியம் நிறைவேறும். செயலில் வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்.
நெல்லிக்காயைத் தானமாகக் கொடுத்தால், கல்வியில் சிறந்த அறிவும், கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும்.
இடத்தைத் தானமாகக் கொடுப்பதன் மூலம் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். மங்காத புகழும், சிறப்பும் என்றும் நிலைத்திருக்கும்.
இதையும் படிக்கலாமே-
மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா- Valaiyal