அமாவாசை அன்று மறந்தும் கூட இதை செய்யாதீங்க-Amavasaya

அமாவாசை

அமாவாசை பொருள்

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய நாளைத்தான் அமாவாசை என்று அழைப்பர். சந்திரன் முழுமையாக மறையக்கூடிய நாள்தான் அமாவாசை ஆகும்.


அமாவாசை விரதம் யார் இருக்க கூடாது?

அமாவாசை அன்று பொதுவாக பெரும்பாலோனோர் அசைவ சாப்பாட்டைத் தவிர்த்து விரதம் இருப்பர். வீட்டைச் சுத்தம் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். ஆண்கள் தாய் , தந்தை இல்லை என்றால் அமாவாசை விரதம் இருக்கலாம். கணவரை இழந்த பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாம். சுமங்கலி பெண்கள் எக்காரணம் கொண்டும் அமாவாசை விரதம் இருக்கக்கூடாது.

அமாவாசை அன்று செய்யக்கூடாதவை

அமாவாசை அன்று வீட்டின் முன் எக்காரணம் கொண்டும் கோலம் போட கூடாது.

அமாவாசை அன்று வீட்டில் காலைப் பொழுதில் படைக்கக் கூடாது. பொதுவாகக் காலையில் அமாவாசைப் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அதைத் தவிர்க்க வேண்டும்.

அமாவாசை  படைத்தப்பிறகு வீட்டில் இருந்து பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி,நூல் இவற்றை யாருக்கும் தர கூடாது. மீறி தந்தால் வறுமை ஏற்படும்.

மறந்தும் கூட அமாவாசை அன்று தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது.

அமாவாசை அன்று நுனி இலையில் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். காகத்திற்குச் சாதம் வைப்பதன் மூலம் நம் முன்னோர்கள் பசியாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

அமாவாசை அன்று நம் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அவர்களின் அருளால் வீட்டில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.

அமாவாசை அன்று மறந்தும் கூட அசைவ சாப்பாட்டைச் சாப்பிடக்கூடாது.

அமாவாசை அன்று உணவில் பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

அமாவாசை அன்று எவரையும் கோவமாகத் திட்டக்கூடாது. அமாவாசை அன்று நம் முன்னோர்கள் மண்ணுலகிற்கு வருவார்கள். அவர்கள் முன் கோவமாகத் திட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

அமாவாசை அன்று பூஜை அறையில் மணி அடிக்கக்கூடாது. மணி அடிப்பதன் மூலம் நம் முன்னோர்களின் ஆன்மா உள்ளே வரத்தயங்குமாம். எனவே, மணி அடிக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே-

மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai

Share this post

1 thought on “அமாவாசை அன்று மறந்தும் கூட இதை செய்யாதீங்க-Amavasaya”

  1. Pingback: பூஜை பொருட்கள் பளபளப்பாக ஜொலிக்க மிக எளிய வழிகள் உங்களுக்காக-Poojai porutkal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top