புற்றுநோயை விரட்டி அடிக்கும் மணத்தக்காளி கீரை- Manathakkali Keerai Benefits

Manathakkali Keerai Benefits

Manathakkali Keerai Benefits – “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியில் நோயில்லாத வாழ்க்கையே, நிறைவான செல்வம் என்று கூறப்படுகிறது. அப்படியானால், நோயில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு, அடிக்கடி மருத்துவமனை சென்று உடலை பரிசோதித்து, நோய் வரும் முன்னே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா? வேண்டவே வேண்டாம்…

Manathakkali Keerai Benefits

மருத்துவமனைக்கு செல்லவும் வேண்டாம். உடலைப் பரிசோதித்து மாத்திரைகளை உட்கொள்ளவும் வேண்டாம். இந்த மணத்தக்காளி கீரையை அடிக்கடி உட்கொண்டாலே போதும், உடலில் இருந்து நோய்கள் பறந்தோடும்.

மிகுதியான பராமரிப்பு இன்றி நம் வீட்டின் அருகில் வளரக்கூடிய செடிகளுள் ஒன்று தான் மணத்தக்காளி.மற்ற கீரைகளைப் போல காசு கொடுத்து, கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டின் அருகிலேயே வளரக்கூடிய இந்த கீரையில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

மணத்தக்காளி கீரை மற்றும் காய் பச்சை நிறமாகவும், பழம் கருப்பு நிறமாகவும், பூ வெள்ளை நிறமாகவும் இருக்கும். மணத்தக்காளியில் வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

மணத்தக்காளியின் பயன்கள் – மணத்தக்காளி கீரை பயன்கள்

Manathakkali Keerai Benefits
  • மூட்டு வலியானது குணமாகும்.
  • காய்சசலானது குணமாகும்.
  • காசநோயானது குணமாகும்.
  • மஞ்சள் காமாலை குணமாகும்.
  • சீறுநீரக கற்கள் கரையும்.
  • புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
  • வயிறு மற்றும் குடற் புண்கள் சரியாகும்.
  • முகப்பரு குணமாகும்.
  • இதய நோய்கள் குணமாகும்.
  • சர்க்கரை அளவை குறைக்கும்.
  • உயர் இரத்த அழுத்தமானது குறையும்.
  • தசைகள் வலிமை அடையும்.
  • குமட்டல் குணமாகும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
  • செரிமான கோளாறு நீங்கும்.

மணத்தக்காளியின் நன்மைகள்…

Manathakkali Keerai Benefits

மணத்தக்காளி இலையை அரைத்து அதன் சாறை நெற்றியில் தடவி வந்தால் காய்ச்சலானது குறையும்.

மணத்தக்காளியின் இலை சாறை கை, கால்களில் தொடர்ந்து தடவினால் தீராத மூட்டு வலியானது குணமாகும்.

தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் காசநோயானது குணமாகும்.

மணத்தக்காளி இலைகளை தண்ணீரில் வேக வைத்து, பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் மஞ்சல் காமாலை நோய் குணமாகும்.

மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் கற்கள் கரையும்.

மணத்தக்காளி கீரையை அதிகளவு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் குறையும்.

மணத்தக்காளி கீரையை குழம்பாகவும், கூட்டாகவும்  செய்து சாப்பிட்டு வந்தால் வாய் மற்றும் குடல் புண்கள் சரியாகும்.

மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், தொண்டை சம்பந்தமான எந்த பிரச்சனையும் வாராது.

Manathakkali Keerai Benefits

மணத்தக்காளி இலையை அரைத்து முகப்பருவின் மீது தடவினால் முகப்பரு சரியாகும்.

மணத்தக்காளி இலையைப் பறித்து நன்றாக கழுவி விட்டு, அதனை நீருடன் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு, அதனை தினம்தோறும் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.

மணத்தக்காளி விதைகளை நிழலில் உலர வைக்கவும். பின்பு, அதனை நன்றாக அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியை தினமும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக உறக்கம் வரும்.

மணத்தக்காளி கஷாயமானது இரத்தததில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

மணத்தக்காளி இலை மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தமானது குறையும்.

மணத்தக்காளி விதைகளை வெயிலில் உலர வைத்து, அதனை குழம்பாக்கி, வத்தலாக்கி சாப்பிட்டு வந்தால் சளியானது குணமாகும்.

மணத்தக்காளி கீரையைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

கர்ப்பிணி பெண்கள் மணத்தக்காளி கீரையைச் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு மணத்தக்காளி கீரையைப் பறித்து, அதனை அரைத்து, அந்த சாறைப் பருகினால் தசைகள் வலிமை அடையும் மற்றும் கண் பார்வை தெளிவாகும்.

மணத்தக்காளி கஷாயமானது குமட்டலை கட்டுப்படுத்துகிறது.

மணத்தக்காளி இலை சாறை காதில் விட்டால், காதுவலியானது குணமாகும்.

Manathakkali Keerai Benefits

மணத்தக்காளி இலையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து அந்த சாறை 20 மில்லி பருகினால் சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மணத்தக்காளி இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் வேர் நுனியில் தடவினால் தலைமுடி வலிமையாகும்.

மணத்தக்காளி இலையை நன்கு காய வைத்து, அதனை அரைத்து பொடியாக்கவும். அந்த பொடியை வீக்கத்தின் மீது தடவினால் வீக்கமானது குறையும்.

மணத்தக்காளி தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே

மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்-Mookirattai keerai benefits

மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top