பழையக் கொலுசு பளபளப்பாக ஜொலிக்க இந்த மூன்று பொருட்கள் போதும்…
மான் போன்ற கால்களுக்கு அழகு சேர்ப்பது கொலுசு. கொலுசு சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பி அணியக்கூடிய அணிகலனாகும். கொலுசு அணிவதன் மூலம் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகும். வீடு முழுக்க கொலுசு ஓசை கேட்பவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கொலுசை வாங்கும் போது பல டிசைன்களில் பார்த்து பார்த்து வாங்கி மகிழ்வர். ஆனால், கொலுசை அணிந்த சில வருடங்களில் அதன் நிறமானது மாறத் தொடங்கும். கொலுசை பளபளப்பாக வைக்க எவ்வளவு முயற்சி செய்தும் பயன் இல்லையா? இந்த மூன்று பொருட்கள் போதும். கொலுசு பளபளப்பாக ஜொலிக்கும்…
தேவையான பொருட்கள்
கோல்கேட் டூத்பேஸ்ட் பவ்டர்
எலுமிச்சை சாறு
சுடத்தண்ணீர்
விளக்கம்
ஒரு கிண்ணத்தில் கோல்கேட் டூத்பேஸ்ட் பவ்டரை மூன்று தேக்கரண்டி கொட்டிக்கொள்ளவும். பின்னர், நன்றாக பழுத்த எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி சாறு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறை கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை அழுக்கான கொலுசின் மீது நன்றாக தேய்க்கவும்.
தேய்த்தப்பின்னர், சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு, இந்த கொலுசைச் சுடத்தண்ணீரில் 10 நிமிடம் நேரம் போடவும். கொலுசு நன்றாக ஊறியதும், அதனை வெளியே எடுத்துக்கொள்ளவும். பின்னர், டூத் பிரஷைப்பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
இப்பொழுது கொலுசில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக நீங்கி, கொலுசு பளபளப்பாக இருப்பதைக் காண முடியும். மிக எளிமையான வழியில் கொலுசைப் பளபளப்பாக மாற்ற இது சிறந்த வழியாகும்.
Pingback: உங்கள் வீட்டில் ரோஜா செடி பூ பூக்கவில்லையா… இது இரண்டு பொருட்கள் போதும்…ரோஜா செடியில் கொத்து