சிலப்பதிகாரம் – சிலப்பதிகாரத்தின் சிறப்புகள் – Silapathikaram in Tamil
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-22-1024x427.png)
சிலப்பதிகாரம் ஆசிரியர் யார்?
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-26-1024x843.png)
சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார்.
சிலப்பதிகாரம் ஆசிரியர் குறிப்பு
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-23-1024x427.png)
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள், தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர். இவர் சேர மரபைச் சார்ந்தவரென சிலப்பதிகார பதிகம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் பெயர் காரணம்
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-27-1024x843.png)
“சிலப்பதிகாரம்” என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
சிலப்பதிகாரம் நூல் குறிப்பு
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-24-1024x427.png)
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேர நாட்டை சேர்ந்த இளங்கோவடிகள் ஆவார்.
- அரசர் குடியில் பிறந்தும் இளமையிலே துறவு கொண்டதால் இளங்கோ என அழைக்கப்பட்டார்.
- சீத்தலை சீத்தனாரின் வேண்டுகோளுகிணங்க சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
- கோவலன், கண்ணகி, கோவலனின் காதலி மாதவி ஆகிய மூவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ஒரு காப்பியமாகும்.
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டை காப்பியங்களாகும்.
- கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக உருவான கதை ஆதலால் இந்நூல் சிலப்பதிகாரம் என்னும் பெயரை பெற்றது.
- குடிமக்கள் காப்பியம், உரையிட்ட பாட்டுடை செய்யுள், நாடக காப்பியம், முத்தமிழ் காப்பியம், ஒற்றுமை காப்பியம் என்பது சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்களாகும்.
- சிலப்பதிகாரம் புகார்காண்டம், வஞ்சிகாண்டம், மதுரை காண்டம் என மூன்று காண்டங்களை உடையது.
சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்
![Silapathikaram in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/11/image-25-1024x427.png)
முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் , குடிமக்கள் காப்பியம் என்று பல பெயர்கள் சிலப்பதிகாரத்திற்கு உண்டு!
சிலப்பதிகாரம் காண்டம் எண்ணிக்கை
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
Q/A
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார்?
பாரதியார் சிலப்பதிகாரத்தை எவ்வாறு பாராட்டுகிறார்? ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்’ எனப் பாராட்டுகிறார்.
2.சிலப்பதிகாரம் என்ன பா வகை?
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார். ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
3.கண்ணகி தோழி பெயர் என்ன?
துறவியாக இருந்த அவர் சமண அற நெறிகளை மற்றவர்க்கு அறிவிப்பதும் தம் தொழிலாகக் கொள்கிறார். கண்ணகிக்குத் தோழி ஒருத்தி அமைகின்றாள் தேவந்தி என்பாள்; பார்ப்பனப் பெண்; பாசாண்டச் சாத்தனை மணந்து அவனால் துறக்கப்பட்டவள்; ஆறுதலைத் தர விழைகிறாள். சோமகுண்டம், சூரிய குண்டம் முழுகிக் காமனைத் தொழுதால் கணவனை அடைவர் என்று கூறுகிறாள்.
4. சிலப்பதிகாரத்தின் இறுதி காதை எது?
Detailed Solution
- ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்
- காலம் – கி.பி. 2ஆம் நூற்றாண்டு
- அடிகள் – 4755.
- காதைகள் – 30.
- பாவகை – நிலைமண்டில ஆசிரியப்பா
- சமயம் – பௌத்தம்
- முதல் காதை – விழாவறைக் காதை
- இறுதி காதை – பவத்திறம் அறுக என பாவை நோற்ற காதை
காதை என்றால் என்ன?
5. காதை என்பதும் படலம் போன்ற ஒரு உட்பிரிவுதான். சிலப்பதிகாரக் காண்டங்களின் உட்பிரிவுகள் காதை என்றும் பெயர் பெறுகின்றன. ‘கதை’ என்ற சொல்லிலிருந்து காதை என்ற சொல் வந்திருக்கலாம். (சிலப்பதிகாரத்தில் பெரும்பாலும் கதை நிகழும் பகுதிகள் மட்டுமே காதை என்று வழங்கப் படுகின்றன!
இதையும் படிக்கலாமே
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – Abdul kalam history tamil – About abdul kalam in tamil