நுங்கு பயன்கள்- Nungu Benefits in Tamil -Ice Apple in Tamil
நுங்கு பயன்கள்
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு – இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில்,
வைட்டமின் பி,
இரும்புச்சத்து,
கால்சியம்,
ஜிங்க்,
பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது நுங்கு.
Nungu Benefits in Tamil
தோல் நோய்
இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக் கொள்ளவும்.
இதை வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவர குணமாகும்.
இதேபோல் அம்மை, அக்கி கொப்பளங்களுக்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம்.
கண் தொற்று
நுங்குவில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மெல்லிய பருத்தி துணியை நனைத்து எடுக்கவும்.
இதை கண்களில் மேல் பற்றாக வைக்கும்போது கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும்.
கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும்.
கண் நோய்களுக்கு நுங்கு நீர் பலன் தருகிறது.
அற்புதமான மருந்தாக விளங்கும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய செய்கிறது.
வயிற்றுப் பிரச்சனை
மோருடன் இளம் நுங்கு, உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு சரியாகும்.
நுங்குவின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
கோடை காலத்துக்கு ஏற்ற உணவான நுங்கை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது.
Ice Apple in Tamil
மலச்சிக்கல்
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
ரத்தசோகை
ரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
மார்பக புற்றுநோய் கட்டிகள்
நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
குடல் புண்
நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
கொப்பளம்
கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
வியர்க்குரு
பெரியோர்கள், இளம் நுங்கை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த நுங்கின் நீரை தடவினால் வியர்க்குரு மறையும்.
உடலின் நீர்ச்சத்து
நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
பதநீர்
பதநீரும், நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம்.
உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.
நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசௌகரியங்களில் இருந்தும், நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் இதில் அதிகம்.
ரத்த சோகையைப் போக்கும்.
தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
இப்படி நுங்கும் பதநீரும் நமக்கு அள்ளித் தரும் நன்மைகள் ஏராளம்!”
இதையும் படிக்கலாமே
ஆப்பிள் பயன்கள்- Apple Fruit in Tamil- Apple Benefits in Tamil