ஐஞ்சிறு காப்பியம் – ஐஞ்சிறு காப்பியங்கள் -ஐஞ்சிறு காப்பியங்கள் நூல்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் பெயர்
காப்பியம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய நால்வகை பொருள்களாகும். இந்த நால்வகை பொருள்களும் ஒன்று சேர்ந்து ஒரு காப்பியத்தில் இருந்தால் அதனை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், இவற்றில் ஏதேனும் ஒரு பொருள் குறைந்து ஒரு காப்பியம் காணப்பட்டாலும் அதனை ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
1. நாககுமார காவியம்
2. உதயகுமார காவியம்
3. யசோதர காவியம்
4. நீலகேசி
5. சூளாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் ஆசிரியர் பெயர்கள்
1. நாககுமார காவியம் – தெரியவில்லை
2. உதயகுமார காவியம் – தெரியவில்லை
3. யசோதர காவியம் –வெண்ணாவல் உடையார்
4. நீலகேசி – தெரியவில்லை
5. சூளாமணி – தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறு காப்பியங்கள் pdf
ஐஞ்சிறு காப்பியங்கள் வகைகள்
சூளாமணி:
இது ஒரு சமண காப்பியம். இயற்றியவர் தோலா மொழித்தேவர்.எல்லா வகையிலும் பெருங்காப்பியமாகத் திகழும் சிறப்புடைய காப்பியம் ஆகும்.இந்நூலின் மூலக்கதை ஆறுகதை மகாபுராணத்தை தழுவியது. இதன் வேறுபெயர் சூடாமணி.
நீலகேசி:
இது ஒரு சமண காப்பியம். குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும். வேறுபெயர் – “நீலகேசி திரட்டு”
உதயணகுமார காவியம்:
இது உதயணன் கதையை கூறும் நூல்.மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.
நாககுமார காவியம்:
நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை..
யசோதர காவியம்: உயிர்க்கொலை தீது எனக் கூறும் நூல்.
ஐஞ்சிறு காப்பியங்கள் கட்டுரை
1. நாககுமார காவியம் – சமண சமயம்
2. உதயகுமார காவியம் – சமண சமயம்
3. யசோதர காவியம் – சமண சமயம்
4. நீலகேசி – சமணசமயம்
5. சூளாமணி – சமண சமயம்
உதயண குமார காவியம்:
- இக்காப்பியம் சதானிகன் என்ற அரசனின் வரலாறையும் பின் அவனது மகனாகிய உதயணன் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. உதயணன் நான்கு பெண்களை மணந்து இறுதியில் துறவு கொள்வதே இக்கதையின் சுருக்கமாகும்.
நாககுமார காவியம்:
- இக்காப்பியம் நாக பஞ்சமியின் வரலாற்றை எடுத்துரைக்கும் காப்பியமாகும். இந்நூல் முழுவதும் பெண்ணின் மனம் மற்றும் போகத்தையும் பேசுகிறது. தலைவன் 519 பெண்களை மணக்கிறான்
யசோதர காவியம்:
- இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்க பெறவில்லை. இது 5 சருக்கங்களையும் 320 விருத்தப்பாக்களையும் உடையது. இந்நூலின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு. இது வடமொழி நூலை தழுவி எழுதப்பட்டது ஆகும்.
சூளாமணி:
- இந்நூலின் ஆசிரியர் தோலாமொழித் தேவர் ஆவர். இது 12 சருக்கங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் உடையது. ஆருகத மகாபுராணம் எனும் நூலை தழுவி இயற்றப்பட்டது.
நீலகேசி:
- ஐம்பெருக்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிராக எழுதப்பட்ட சமண காப்பியமாகும். சமயத் தத்துவத்தினும் சமணத் தத்துவமே உயர்ந்தது என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.
இதையும் படிக்கலாமே
ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர் -Aimperum Kappiyangal in Tamil
திருவள்ளுவர் வரலாறு-About Thiruvalluvar in Tamil -Thiruvalluvar History in Tamil