அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள்
அபிஷேக பொருட்கள் பலன்கள்-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. இறைவனுக்குப் பலவகையான பொருட்களால், அபிஷேகம் செய்வது மரபு. அத்தகைய அபிஷேகப் பொருட்களின் வகைகளையும், அவற்றின் பயன்களையும் அறிவோம் வாருங்கள்.
அபிஷேக பொருட்களும், அவற்றின் பயன்களும்…
நன்னீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், உள்ளத்தில் தெளிவு, அறிவில் தெளிவு, பேச்சில் தெளிவு ஏற்படும். பேரும், புகழும் கிடைக்கும்.
நல்லெண்ணெயால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், எடுத்த காரியம் கைகூடும். காரியத்தடை நீங்கும். தொழிலில் லாபம் பெருகும்.
பச்சரிசி மாவால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், பணப்புழுக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். தொழிலில் லாபம் பெருகும்.
திருமஞ்சனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், நல்ல நட்பு கிடைக்கும். உயர்ந்த பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும்.
பசும்பாலால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், நீண்ட ஆயுள் பெருகும். உடலானது ஆரோக்கியமாகவும், நோய் நொடி இன்றியும் இருக்கும்.
பசுந்தயிரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உள்ளத்தில் அமைதி நிலவும். வெளியுலகில் பேரும், புகழும் கிடைக்கும்.
பஞ்சாமிர்த்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், உடலிலும், மனதிலும் பலம் பெருகும். செயலில் வெற்றி கிடைக்கும்.
தேனால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகும்.
நெய்யால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், முக்தி பேறு கிடைக்கும். மனத்தெளிவு கிடைக்கும்.
சர்க்கரையால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், எதிரியை வெல்லக்கூடிய ஆற்றல் கிடைக்கும். பலம் அதிகரிக்கும்.
இளநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், பிள்ளைகளால் மகிழ்ச்சியும், புகழும் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள்.
இதையும் படிக்கலாமே-
தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal