விளக்கை துலக்க வேண்டிய நாட்கள்-எந்த கிழமையில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்?-விளக்கேற்றும் நேரம்

விளக்கேற்றும் நேரம்

விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாரம் ஒரு முறையாவது பூஜை பொருட்களை சுத்தம் செய்து, மஞ்சள் பூங்குமம் வைக்க வேண்டும். வெள்ளி குத்துவிளக்கு அல்லது காமாட்சியம்மன் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றினால், குடும்பத்தின் வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். இறைவன் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் , இறைவனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் ஒற்றுமையும் பெருகும்.

ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றி வழிபட்டால்

விளக்கேற்றும் நேரம்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நினைத்திருக்கும். பெண்களுக்கு திருமண பேச்சுக்கள் சுகமாக நடந்திடும். தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள எதிர்மறை ,மன அழுத்தம் நீங்கும். கவலை , பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவை விலகும்.

நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால்

நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் இறைவனை வழிபட்டால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமுதாயத்தில் நன்மதிப்பு பெருகும்.

நெய் ஊற்றி விளக்கேற்றினால்

நெய் ஊற்றி விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் ஒற்றுமையும் பெருகும்.

விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால்

விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் புகழ்பெருவும் சமுதாயத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும்

இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால்

இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால், குடும்பத்தில் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால்

தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால், காரிய தடைகள் நீங்கும்

எந்த கிழமையில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்?

விளக்கேற்றும் நேரம்

திங்கள் அன்று விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் மன அழுத்தம் நீங்கும் கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவை நீங்கும்.

செவ்வாய் அன்று விளக்கேற்றி இறைவனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் , கேது பகவானால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும். திருமண தடை நீங்கும்.

புதன் அன்று விளக்கேற்றி இறைவனை வழிபட்டால், கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஞாபக மறதி சரியாகும். வெற்றி கிடைக்கும்.

வியாழன் அன்று விளக்கேற்றி இறைவனை வழிபட்டால், புத்திர தோஷம், குழந்தையால் ஏற்படும் பிரச்சனைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை போன்றவை நீங்கும். ஆண்களின் திருமணத்தடை நீங்கும்.

வெள்ளியன்று விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பிரச்சனை சரியாகும். மனவேதனை நீங்கும்.

சனி அன்று விளக்கேற்றி இறைவனை மனதார வேண்டினால், உடல் நல பாதிப்பு சரியாகும். தொழுகையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

விளக்கேற்றும் நேரம்

விளக்கேற்றும் நேரம்

காலையில் 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்றி வழிபட்டால், சர்வ மங்கள யோகம் கிடைக்கும். காலை விளக்கேற்றும் போது உடல் மனம் சுத்தத்துடன் வாசல் தெளித்து கோலம் போட்ட பின்னரே, விளக்கேற்றி வழிபட வேண்டும். மாலை 6 மணிக்கு விளக்கேற்றி வழிபட்டால் நல்ல கணவன், குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

பஞ்சினால் ஆன திரியால் தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தாமரை தண்டினால் ஆன திரியால் தீபம் ஏற்று வழிபட்டால், முன் ஜென்ம பாவங்கள் விலகும். வாழைத்தண்டு திரியால் விளக்கேற்றினால் நல்ல வாரிசுகள் கிடைப்பார்கள். வம்சம் விருத்தி ஆகும்.

விளக்கேற்றும் போது செய்யக்கூடாதவை

பூஜை அறையில் எவர் சில்வர் விளக்கு தீபம் ஏற்ற கூடாது.

கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது.

தரையில் விளக்கு வைத்து தீபம் ஏற்றுக் கூடாது.

விளக்கை எந்த நாளில் துலக்க வேண்டும்?

விளக்கை எந்த நாளில் துலக்க வேண்டும். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேரனின் பிரதிநிதியான சங்க நீதியின் துணைவி குடியிருக்கிறாள். ஆகையால், வெள்ளிக்கிழமை விளக்கை துலக்குவதை நிறுத்த வேண்டும். மேலும், ஞாயிறு, திங்கள், வியாழன் சனிக்கிழமைகளில் விளக்கை துலக்கவேண்டும்.

விளக்கை துலக்க வேண்டிய நாட்கள்

விளக்கேற்றும் நேரம்

சனிக்கிழமை விளக்கை துலக்கினால், பயணத்திலும் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.

ஞாயிறன்று விளக்கை துலக்கினால், கண் நோய்கள் குணமாகும். பார்வை பிரகாசம் அடையும்.

விளக்கை ஏதாவது ஒரு தட்டில் சிறிது பச்சரிசி வைத்து அதன் மேல் விளக்கு வைத்து ஏற்ற வேண்டும். தாமிர தீபம் ஏற்றினால், கோபம் நீங்கும். வெண்கலை விளக்கில் தெய்வம் ஏற்றினால் பாவம் விளக்கும்.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திர அதிபதிகள் – Natchathira athipathi -Natchathiram athipathi in tamil

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top