பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

பிரதோஷம்

பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிப்பட்டால், குடும்பத்தில் ஒற்றுமையும், தொழிலில் லாபமும், படிப்பில் வெற்றியும் உண்டாகும். மாதம் இருமுறை பிரதோஷம் வரும். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என இரண்டு பிரதோஷம் வரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ வழிபாட்டின் காலமாகும். இந்நேரத்தில் சிவபெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு அபிஷேகம் நடைபெறும்.

சிவனின் வாகனம்

பிரதோஷம்

சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடக்கும். மூலவருக்கு நடக்கும் ஆராதனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்தால் தோஷம் அனைத்தும் விலகும்.

24 பிரதோஷத்திற்கு சிவன் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை பிரதோஷத்திற்குச் சென்றால், வருடம் முழுக்க சென்ற பலன் கிடைக்கும். பிரதோஷ நாளில் காலையில் நீராடி, உண்ணா நோம்பு இருந்து, மாலை கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நன்மை பெருகும்.

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். கவலைகள் பறந்தோடும். மகிழ்ச்சி பெருகும்.

திங்கள் பிரதோஷம்

திங்கள் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், மனதில் ஆனந்தம், அமைதி, மன வலிமை உண்டாகும்.

செவ்வாய் பிரதோஷம்

செவ்வாய் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், தீமை அனைத்தும் விலகும். கடன் தொல்லை தீரும்.

புதன் பிரதோஷம்

புதன் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், அறிவு ஆற்றல் பெருகும். தீமை அனைத்தும் விலகும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வியாழன் பிரதோஷம்

வியாழன் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், தோஷம், ஊழ்வினை, சாபம் அனைத்தும் நீங்கும்.

வெள்ளி பிரதோஷம்

வெள்ளி பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், மங்கலம் மற்றும் செல்வம் பெருகும்.

சனி பிரதோஷம்

சனி பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், துன்பங்கள் அனைத்தும் விலகும். பாவம் விலகும். நல்வாழ்வு அமையும்.

இதையும் படிக்கலாமே –

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

Share this post

2 thoughts on “பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham”

  1. Pingback: Chitra pournami 2023- ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

  2. Pingback: திருநீறு மகிமை பற்றி தெரிந்துகொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர்- Thiruneer Benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top