கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம் -கருவளையம் மறைய டிப்ஸ்- Karuvalayam Poga Tips in Tamil

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம் – Karuvalayam Poga Tips in Tamil-நம் முகத்திற்கு அழகு சேர்ப்பது கண்கள். அந்த கண்களுக்கு கீழே வரக்கூடிய கரு வளையமானது முக அழகைக் கெடுக்கிறது. இன்று பெரும்பாலனோர் சந்திக்கும் பிரச்சனையாக கருவளையம் உள்ளது. இந்த கருவளையத்தைப் போக்க எவ்வளவோ காசை செலவு செய்தும் பயன் இல்லையா? இனி பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே கரு வளையத்தை நீக்கலாம்.

கருவளையம் வருவதற்கான காரணங்கள்…

இருட்டில் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாலும், அருகில் அமர்ந்து தொலைகாட்சி பார்ப்பதாலும், ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலும், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் கருவளையம் தோன்றுகிறது.

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம் – Karuvalayam Poga Tips in Tamil

 உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை கருவளையத்தின் தடவினால் கருவளையம் மறையும்.

வாழைப்பழத் தோலை கருவளையத்தின் மீது வைத்து மசாஜ் செய்தால் கருவளையம் மறையும்.

எலுமிச்சை பழச்சாறை பஞ்சில் எடுத்து, கருவளையத்தின் மீது தினமும் தடவி வந்தால் கருவளையமானது மறையும்.

புதினாவை அரைத்து அதனை கருவளையத்தின் மீது தடவி வந்தாலும் கருவளையமானது மறையும்.

பச்சை வாழைப்பழத் தோலின் மீது தேங்காய் எண்ணெயைத் தடவி, அதனை கருவளையத்தின் மீது தடவினால் கருவளையமானது மறையும்.

பாதாம் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து கருவளையத்தின் மீது தடவினால், கருவளையமானது மறையும்.

வெண்ணெயுடன் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு சாறு கலந்து அதனை கருவளையத்தின் மீது தடவினால், கருவளையமானது மறையும்.

பாலை கருவளையத்தின் மீது தடவினால், கருவளையமானது மறையும்.

பாலுடன் சிறிது குங்குமப் பூ சேர்த்து கருவளையத்தின் மீது தடவினால், கருவளையமானது மறையும்.

கொத்தமல்லி தழை, வெள்ளரிக்காய் மற்றும் குங்குமப்  பூ  அதனை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை கருவளையத்தின் மீது தடவி வந்தால் கருவளையமானது மறையும்.

உருளைக்கிழங்கை அரைத்து அதனை கருவளையத்தின் மீது தடவி, மசாஜ் செய்தால் கருவளையமானது மறையும்.

எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும். தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

இதையும் படிக்கலாமே

செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்- செம்பருத்தி பூ பயன்கள்-Sembaruthi

கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top