மாதுளை பயன்கள் -Pomegranate in Tamil -Mathulai Benefits in Tamil

Pomegranate in Tamil

Pomegranate in Tamil -Mathulai Benefits in Tamilமாதுளை முத்துகள் மருத்துவ குணம் நிறைந்த பழமாகும். மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளில் கிடைக்கிறது. மாதுளம் பழத்தில் ஃபோலேட் மற்றும் பிற பி-வைட்டமின்கள் மற்றும் வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே ஆகியவை கணிசமான அளவு அடங்கியுள்ளன. பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னேசியம், இரும்பு சத்து போன்ற தாது சத்துக்கள் அடங்கியுள்ளன.

இனிப்பு மாதுளைப் பழத்தை சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும். பித்தத்தைப் போக்கும். இருமலை குணமாக்கும். புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்கும். இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகும். தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றும். குடற் புண்களைக் குணமாக்கும். மாதுளை விதைகளை சாப்பிட்டால் இரத்தவிருத்தி அதிகரிக்கும். சீதபேதிக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இவ்வாறு மாதுளையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது.

மாதுளை பழத்தின் நன்மைகள் -Mathulai Benefits in Tamil

Pomegranate in Tamil

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப்பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும், தெம்பும், புதிய இரத்த உற்பத்தியும் பெறும்.

மாதுளை பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், பித்தம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும் மற்றும் உடல் எடை அதிகரிக்கும்.

மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறையும்.

மாதுளை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோலில் ஏற்படும் கருமை நீங்கும். மேலும், தோல் புற்றுநோயும் நம்மை நெருங்காது.

Pomegranate juice benefits in tamil -மாதுளை ஜூஸ் பயன்கள்

தினமும் மாதுளை (pomegranate juice benefits in tamil) பழச்சாற்றைப் பருகி வந்தால் இதயமானது பலப்படும்.

மாதுளை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல் ஈறுகளில் மறைந்திருக்கும் கிருமிகள் அழியும்.

தினமும் மாதுளை பழச்சாற்றைப் பருகி வந்தால் எலும்புகள் வலிமை அடையும்.

மாதுளை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கர்ப்ப பை ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை பழச்சாறைக் குடித்து வந்தால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மாதுளை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

மாதுளை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளைக் கட்டிகள் வராது.

கருவுற்ற பெண்கள் மாதுளைப் பழச்சாறைப் பருகினால் வாந்தி மற்றும் மசக்கையானது குணமாகும்.

தினமும் மாதுளை பழச்சாறைக் குடித்து வந்தால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.

மாதுளையின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

மாதுளை யார் சாப்பிட கூடாது

குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், மாதுளை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இருமல் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே

நிலவேம்பின் மருத்துவக் குணங்கள் -Nilavembu Kashayam Uses in Tamil

செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்- செம்பருத்தி பூ பயன்கள்-Sembaruthi

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top