தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam
தோல் சுருக்கம் வரக் காரணம்
ஊட்டச்சத்து குறைப்பட்டாலும், புகை பிடிப்பதாலும், வெயிலில் அலைவதாலும், வயதான காரணத்தாலும் தோலில் சுருக்கம் ஏற்படுகிறது.
தோல் சுருக்கம் நீங்க
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். ஆரஞ்சு, சாத்துக்குடி,கொய்யாப்பழம், பப்பாளி ஆகிய பழங்களையும், குடைமிளகாய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
கேரட் பழச்சாறு, வெள்ளரிக்காய் பழச்சாறு, பீட்ரூட் பழச்சாறு அதிகளவு பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளியைப் பிழிந்து சாறு எடுத்து தோலின் மீது தடவி வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்து தயிருடன் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் அரைத்த திராட்சை மற்றும் தேனைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் முகச்சுருக்கம் நீங்கும்.
முட்டையை நன்றாக கலக்கிக்கொள்ளவும். அத்துடன், தேன், பால், ஆலிவ் எண்ணெய், பதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் கலந்து உடம்பில் தேய்த்து, ஊற வைத்து பின்னர் சோப்புபோட்டு குளித்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து உடம்பில் தேய்த்து ஊற வைக்கவும். பின்னர், கோதுமைத் தவிட்டால் ஒத்தடம் கொடுக்கவும். பின்னர், கடலை மாவைத் தடவி ஊற வைத்து, முகத்தைக் கழுவினால் முகச்சுருக்கம் நீங்கும்.
வெந்தயக் கீரை சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய் இவற்றை சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்