சுளுக்கு குணமாக இந்த ஆறு பொருட்கள் போதும்- Suluku kunamaga
நடக்கும் போது கால் இடறினாலும், கீழே விழுவதாலும் , கழுத்தை வேகமாக திருப்புவதாலும் சுளுக்கு ஏற்படுகிறது. சுளுக்கால் மக்கள் பெரிதும் அவதிப்படுவர். சுளுக்கைக் குணப்படுத்த வீட்டு வைத்திய முறைகளே நிறைய உள்ளன. அவற்றைப் பற்றிக் காணலாம்.
முருங்கை பட்டை – Suluku kunamaga
முருங்கை பட்டையுடன் பெருங்காயம், கடுகு, சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை சூடேற்ற வேண்டும். பின்னர், சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டு வந்தால் சுளுக்கு குணமாகும்.
பிரண்டை – Suluku kunamaga
பிரண்டையை அரைத்துக்கொள்ளவும். அத்துடன் மஞ்சள் மற்றும் உப்பு கலந்து நன்றாக காய்ச்ச வேண்டும். பின்னர், அதனை சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டு வந்தால் சுளுக்கு குணமாகும்.
ஜாதிக்காய் – Suluku kunamaga
ஜாதிக்காயை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை பாலுடன் கலந்து சூடேற்றி சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டு வந்தால் சுளுக்கு குணமாகும்.
ஆமணக்கு எண்ணெய் – Suluku kunamaga
ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு, சுளுக்கு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்தால் சுளுக்கு குணமாகும்.
பூண்டு – Suluku kunamaga
பூண்டை உரித்து அத்துடன் உப்பு கலந்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டு வந்தால் சுளுக்கு குணமாகும்.
மிளகு – Suluku kunamaga
கற்பூரத்தையும், மிளகையும் நீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனை துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சுளுக்கு குணமாகும்.
இதையும் படிக்கலாமே-
எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…