சோம்பின் மருத்துவக் குணங்கள்– Sombu Benefits in Tamil -Fennel seeds in tamil

Sombu Benefits in Tamil -Fennel seeds in tamil

Sombu Benefits in Tamil- Fennel seeds in tamil என்ன இந்த சின்ன சோம்பில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியம் படும் அளவிற்குச் சோம்பில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சோம்பின் மருத்துவக்குணங்கள் பற்றி அறிவோம் வாருங்கள். சோம்பில் தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம்,  மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது.

ஜீரண சக்தி அதிகமாக, வாயுத்தொல்லை நீங்க, பசி அதிகரிக்க: “சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும். சோம்பு சாப்பிட்டா பசிய நல்லா தூண்டும்.

Benefits of fennel seeds water

உடல் எடை குறைய

ஒரு தேக்கரண்டி சோம்பை எடுத்துக்கொள்ளவும். இதனை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டிக் குடித்து வந்தால், உடல் எடையானது குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரையும். உடலானது பலமாக இருக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் 

சோம்பில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தையும் சுத்திகரிக்க உதவுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் திறம்பட உறிஞ்சுவதற்கு சோம்பு டீ உதவியாக இருக்கும்.

செரிமானக் கோளாறு

ஒரு தேக்கரண்டி சோம்பை எடுத்துக்கொள்ளவும். இதனை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டிக் குடித்து வந்தால், செரிமானச் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும். செரிமானம் நன்றாக நடக்கும்.

கர்ப்பிணி பெண்கள்

ஒரு தேக்கரண்டி சோம்பை எடுத்துக்கொள்ளவும். இதனை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டிக் குடித்து வந்தால், வாந்தி கட்டுக்குள் வரும். குமட்டல் குணமாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

வயிறு,சருமம், மார்பக புற்று நோய் போன்ற  புற்று நோய்களின் அபாயத்தை சோம்பு குறைக்கிறது. இது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியான ஃப்ரீ ரேடிக்கல்களை உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது.

சிறுநீரகக் கோளாறு

சோம்பு தண்ணீரைப் பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.  சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

மாதவிடாய் வலியை போக்கும்

மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற சோம்பு டீ அல்லது நீரை குடிக்கலாம். இது மாதவிடாயின் அறிகுறிகளை சமாளிக்கவும் உதவுகிறது. பல பெண்களும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சீராக்க சோம்பு நீர் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சுறுசுறுப்பு

காலையில் எழுந்ததும் சோம்பு தண்ணீரை காபி, தேநீருக்குப் பதிலாகக் குடித்து வந்தால், உடலானது சுறுசுறுப்பாக இருக்கும். மூளையானது நன்றாக செயல்படும். உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

பருக்களை நீக்கும் 

சோம்பு சருமத்திற்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இந்நிலையில் இயற்கையான முகப்பொலிவைப் பெற சோம்பு நீர் குடிக்கலாம்.

கண் ஆரோக்கியம் 

சோம்பு நீர் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?  சோம்பில் உள்ள வைட்டமின் A கண்களுக்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே

அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்- Ashwagandha Benefits

தோலைப்  பொன் போல ஆக்கும் குப்பைமேனி – Kuppaimeni Leaves Benefits -Kuppaimeni uses in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top