ஆமணக்கில் இவ்வளவு மருத்துவ குணங்களா-Ricinus benefits

Ricinus benefits

Ricinus benefits- ஏரண்டம், சித்திரம், தலரூபம்  என்ற மாற்றுப்பெயர்களை கொண்டது ஆமணக்குச் செடி. ஆமணக்குச் செடியில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று வகைகள் உள்ளன.

சிற்றாமணக்கு சிறிய அளவு கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவு கொட்டையும் கொண்டது. சிவப்பான விதை மூலமாக செல்வாமணக்கு என்கிற மூன்றாவது வகை உள்ளது.

ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரக்கூடிய இயல்புடையது. கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகளை உடையது. 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம். இலைகள் மிகப் பெரியதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும் இருக்கும். தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் இருக்கும். காயில் முட்கள் இருக்கும். முட்களுடன் கூடிய காய்  காய்ந்தால் வெடிக்கக்கூடிய தன்மையைக் கொண்டது.

ஆமணக்கு விதைக்கு முத்துக்கொட்டை என்ற பெயரும் உண்டு. தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக வளர்க்கப்படுகின்றது. ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்புச்சுவையும் கொண்டவை.

ஆமணக்கு மருத்துவக் குணங்கள்

ஆமணக்கு வேர் பயன்கள்-

வாதநோய்

ஆமணக்கு வேரைச் சுத்தம் செய்து, பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியைச் சாப்பிட்டு வந்தால், வாதநோய்கள் குணமாகும்.

ஆமணக்கு விதை பயன்கள்-

சிறுநீர் கோளாறு

ஆமணக்கு விதைகளானது சிறுநீர் அடைப்பைக் குணப்படுத்தக்கூடியது. சிறுநீர் எரிச்சல் முதலிய அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தக்கூடியது.

கட்டிகள்

ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கிக்கொள்ளவும். உள்ளே இருக்கும் பருப்பை அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைக் கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.

ஆமணக்கு எண்ணெய் பயன்கள் –

மலச்சிக்கல்

ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், மலச்சிக்கல் குணமாகும். விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்துக்கொள்ளவும். இதனை ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஆமணக்கு இலை பயன்கள்-

வீக்கம்

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கவும். வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீக்கம் குறையும். ஆமணக்கு இலையைப் பறித்துக்கொள்ளவும். அரைத்த விழுதை வீக்கம் ,கட்டி மீது தடவினால் வீக்கமானது கரையும் .

மஞ்சள் காமாலை

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.  இதனை காலையில் மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை நோய் குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் இருக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

ஆமணக்கு எண்ணெயுடன் , தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவிக்கொள்ளவும். பின்னர், அனலில் இலேசாக வதக்கவும்.  இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டினால் தாய்பால் நன்றாக சுரக்கும்.

மூட்டுவலி

ஆமணக்கு இலைச்சாற்றை மூட்டுகளில் தடவினால், மூட்டுவலி குணமாகும். மூட்டு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே-

உத்தாமணியின் மருத்துவக்குணங்கள்-Uthamani mooligai benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top