புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள் -Punnai tree
Punnai tree-புன்னையானது மரவகையைச் சேர்ந்தது. புன்னையானது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். ஒரு கொத்தில் 4 – 15 பூக்கள் பூக்கும் தன்மையைக் கொண்டது. புன்னை மரம் வலிமையான மரம். இந்த மரத்தைப் பயன்படுத்தி படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.
புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்
சிரங்கு
புன்னை பூவைப் பறித்து அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை சிரங்கிற்குப் போடலாம். சிரங்கானது விரைவில் குணமாகும்.
தோல் சார்ந்த நோய்கள்
புன்னை இலையைப் பறித்து நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். அந்த நீரில் குளித்தால் தோல் சார்ந்த நோய்களான சொறி, சிரங்கு அனைத்தும் மறையும்.
டைபாய்டு
புன்னை பூவைப்பறித்துக்கொள்ளவும். அதனை, நிழலில் உலர்த்தித் தூள் செய்துக்கொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இந்த தூள் சாப்பிட்டு வந்தால் டைபாய்டு குணமாகும்.
முடக்கு வாதம்
புன்னை விதையை அரைத்துக்கொள்ளவும். அதனை கொதிக்க வைத்துப் பற்றுப் போட்டால், முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் அனைத்தும் குணமாகும்.
மூட்டுவலி
புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கிக் கொள்ளவும். தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூட்டுவலி குணமாகும். பிறகு , மூட்டு வலி சார்ந்த பிரச்சனைகளே வாராது.
Pingback: தக்காளியின் மருத்துவ பயன்கள்… -Tomoto