வெங்காயத் தாளின் மருத்துவக் குணங்கள் – Onion Leaf Benefits

Onion leaf benefits

Onion Leaf Benefitsவெங்காயத்தின் மேல் பகுதியில் வளரக்கூடிய வெங்காயத்தாள் பசுமை நிறம் உடையது. வெங்காயத்தாளில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கீரையை வகையைச் சார்ந்தது ஆகும். வெங்காயத்தாளில் கந்தகச்சத்து  உள்ளது. மேலும், வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது.

செரிமானக் கோளாறு – Onion Leaf Benefits

வெங்காயத்தாளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். செரிமானம் நன்றாக நடக்கும். செரிமானம் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

பெருங்குடல் புற்றுநோய் – Onion Leaf Benefits

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின்  என்னும் வேதிப்பொருள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. வெங்காயத்தாளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

காசநோய் – Onion Leaf Benefits

வெங்காயப்பூவைப் பறித்துக்கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தாள் இரண்டையும் அரைத்துக்கொள்ளவும். இந்த சாறை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகி வந்தால் காச நோய் குணமாகும்.

Onion leaf benefits

கண் பார்வை – Onion Leaf Benefits

வெங்காயத்தாளைப் பொரியலாகச் செய்து, சாப்பிட்டு வந்தால், கண் நோய் மற்றும்  கண் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். கண் பார்வைத் தெளிவாகும்.

இரத்த அழுத்தம்Onion Leaf Benefits

வெங்காயத்தாளைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், அதனை அரைத்துக்கொள்ளவும். அந்த சாறை வடிகட்டி பருகி வந்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். இரத்த அழுத்தம் குறையும். இதயம் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

இதையும் படிக்கலாமே-

  1. அமுக்கரா கிழங்கின் மருத்துவப் பயன்கள்- Amukkara Kizhanku
Share this post

1 thought on “வெங்காயத் தாளின் மருத்துவக் குணங்கள்- Onion Leaf Benefits”

  1. Pingback: தொட்டால் சிணுங்கியின் மருத்துவப் பயன்கள்…. -Thotta chinungi plant

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top