முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்-கரு கரு என தலை முடி நீளமாக வளர வேண்டுமா?-Mudi Valara Tips in Tamil
Mudi Valara Tips in Tamil- நம் முகத்திற்கு அழகு சேர்ப்பது தலையில் கரு கரு என அடர்த்தியாக வளரும் முடியே. ஆனால், இன்று நாம் பெருபாலனோர் முடி கொட்டுதல், இளநரை போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
நல்ல உணவு பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இவற்றின் மூலம் முடிக்கொட்டுதலைத் தடுக்க முடியும். முடியை வளர செய்ய காசை செலவு செய்தும் பயன் இல்லையா? இனி பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே முடி கொட்டும் பிரச்சனையைத் தீர்க்கலாம். முடியானது நீளமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் காணலாம்.
தலை முடி கொட்டுவதற்கான காரணங்கள்…
புரதச் சத்து குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு, விட்டமின் குறைபாடு மற்றும் மன அழுத்தம், அதிகமாக வெயிலில் அலைதல், முடியைப் பராமரிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் முடிக்கொட்டுகிறது.
தலை முடி நீளமாக வளர செய்ய வேண்டியவை -Mudi Valara Tips in Tamil
கருவேப்பிலை, செம்பருத்தி, மருதாணி , வேப்பிலை .இலைகளைப் பறித்துக்கொள்ளவும். இந்த இலைகளை நன்றாக காய வைத்துக்கொள்ளவும். பின்னர், பொடியாக்கி இதனை, தேங்காய் எண்ணெயில் கலந்துக்கொள்ளவும். இதனை , தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
செம்பருத்தி இலையை அரைத்துக்கொள்ளவும். இதனை, தலையில் தடவி ஊற வைத்துக்கொள்ள வேண்டும். இதனை, தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், தலைக்குக் குளித்தால் முடி நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை அரைத்து , தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், தலைக்குக் குளித்தால் முடி நன்றாக வளரும்.
கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.இத்துடன், தயிரைக் கலந்துக்கொள்ளவும். இதனை, தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், தலைக்குக் குளித்தால் முடி நன்றாக வளரும்.
செம்பருத்தி மலர் மற்றும் நெல்லிக்காய் , கடுக்காய் இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை, தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், தலைக்குக் குளித்தால் முடி நன்றாக வளரும்.
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்
செம்பருத்தி மலர் பொடி மற்றும் ஆலமர வேர் பொடி இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டுக்கொள்ளவும். இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயம், கருஞ்சீரகம், கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை கலந்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக காய்ச்ச வேண்டும். பின்னர், இதனை, வடிகட்டி தலைக்குத் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
புரதச் சத்து, இரும்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாதாம் பருப்பு, வால்நட், முந்திரி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தலைமுடிக்கு உறுதித்தன்மையையும், ஊட்டச்சத்தையும் கொடுக்கும். முடி கொட்டுவதைத் தடுக்கும். முடியை நன்றாக வளரச் செய்யும்.
கேரட்டை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டில் உள்ள சத்தானது தலையில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, முடியை நன்றாக வளரச் செய்யும்.
முடி அடர்த்தியாக வளர டிப்ஸ்
எண்ணெயைத் தடவி தலையை நன்றாக மசாஜ் செய்தால், தலைமுடி நன்றாக வளரும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் முடிக்கு சத்து கிடைக்கும். முடியும் நன்றாக வளரும்.
பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கீரை தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டும். மேலும், முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். முடியை நன்றாக வளரச் செய்யும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நீங்கி, முடி நன்றாக வளரும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரைக் கொண்டு தலைமுடியை அலசினால், முடி நன்றாக வளரும்.
முட்டையின் மஞ்சள் கருவுடன், எலுமிச்சை சாறைக் கலந்து தலையில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலை முடியை அலசவும். இவ்வாறு செய்தால் முடியானது நன்றாக வளரும்.
நெல்லிக்காய் மற்றும் வல்லாரைக் கீரையை அரைத்து, தலையில் தடவினால் முடி நன்றாக வளரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் இவற்றை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடி நன்றாக வளரும்.
செம்பருத்தி இலை மற்றும் பூவை அரைத்து தலையில் தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
கரிசலாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, அவுரி இவற்றை அரைத்து, தினமும் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டும் பிரச்சனை நீங்கும்.
எலுமிச்சையுடன், தேயிலை மர எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்தால் முடியானது நன்றாக வளரும்.
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்து , எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், இதனுடன் வெட்டி வேர் சேர்க்கவும். பிறகு, இதனை வடிகட்டி ஆற வைத்து, பயன்படுத்தினால் முடி நன்றாக வளரும்.
இதையும் படிக்கலாமே
தழும்பு குணமாக- Thalumbu Maraiya Cream-Mederma Cream Uses in Tamil