மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam
குறைந்த இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், சரியாக சாப்பிடாத காரணம், காய்ச்சல் ஆகியவற்றால் மயக்கம் ஏற்படும். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு எழுந்திருக்கக்கூடாது. நன்றாக கண்ணைத் திறந்து பார்த்து, மனதை சமநிலைப்படுத்தி பின்னரே, மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.
கொத்தமல்லி உடன் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்து, தாளித்து கொத்தமல்லி துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். கருவேப்பிலை உடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து, தாளித்து கருவேப்பிலை துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். புதினா உடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி , கருவேப்பிலை சேர்த்து அரைத்து, தாளித்து புதினா துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும்.
கொத்தமல்லி விதையை நீரில் போட்டு, கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து, வடிகட்டிக் குடித்தால் மயக்கம் குணமாகும்.
இஞ்சியைத் தோல் சீவி, நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மயக்கம் குணமாகும்.
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் போதும், மயக்கம் பறந்தோடும். நெல்லிக்காயைத் துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மயக்கம் குணமாகும்.
நார்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக குடிக்க வேண்டும். எண்ணெயில் வறுத்த , பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே –
முதுகு வலி பிரச்சனை வராமல் இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain