Lizard in food – பல்லி விழுந்தால் உணவு விஷமா?

Lizard in food - பல்லி விழுந்தால் உணவு விஷமா?

பல்லிகள் மனிதர்கள் வாழும் இடங்களில், பூச்சிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. அதுவும், துணிகள் மற்றும் மற்றும் நீங்கள் பாதுகாக்கும் பல பொருட்களைப் பூச்சிகளிடம் இருந்து காப்பதில் பல்லிகளின் பங்கு மிக அதிகம்.

நாம் உண்ணும் உணவுகளில் சிறு பூச்சிகள் விழுந்தாலே, உணவு வீணாகி விட்டதே என்று கவலைப்படுகிறோம். இருப்பினும், சிலர் சிறு பூச்சி தானே என்று, பூச்சியை எடுத்துப் போட்டுவிட்டு உணவை மீண்டும் சாப்பிடவும் செய்வார்கள்.

ஆனால், உணவில் பல்லி நிச்சயம் யாராக இருந்தாலும் அச்சப்படுவது நிச்சயம். பொதுவாகவே, பல்லி விழுந்த உணவு விஷம் என பலரும் கூறுக் கேட்டிருக்கிறோம். சில திரைப்படங்களில் கூட, இது மனித உயிரைப் பறிக்கும் விஷமாகவே காட்டப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் பல்லி விழுந்த உணவு விஷம் தானா? இல்லையா? அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பல்லிகளில் எல்லாவகையும் கொல்லக்கூடிய திறன் கொண்டது அல்ல. உலக அளவில் கிட்டத்தட்ட 6000 வகை பல்லிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாம்புகளுக்குக் கால், கை வைத்துப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது பல்லிகள்.

பல்லி விழுந்த உணவு விஷமா?

Lizard in food - பல்லி விழுந்தால் உணவு விஷமா?

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் உணவு விஷமாகுமாகும். பல்லி உணந்த உணவுகளை சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும் வரை ஒன்றும் தெரிவதில்லை.

உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்துகிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்கும், அது பற்றிக் கேட்டவருக்கும் பயம் தொற்றும். இதனால் ஏற்படும் அருவருப்பாலும், பல்லி பற்றிய மரண பயத்தாலும், பதற்றத்தாலும்தான் வாந்தி ஏற்படுகிறது. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதோடு, உணவு கெட்டுப்போயிருந்தாலும், வாந்தி ஏற்படுவது இயற்கையே.

அதிகப்படியான வாந்தியால் ஏற்படும் டிஹைட்ரேஷனால் மயக்கம் உண்டாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்குப் பரிந்துரைக்கிறார்கள். மற்றபடி உயிரிழப்பு என்கிற அளவுக்கு பயப்படத் தேவையில்லை.   

பூச்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை,  விஷத்தன்மை கொண்டவை மற்றும் விஷத்தன்மை அற்றவை என குறிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக எந்த ஒரு பூச்சியாக இருந்தாலும், அது உணவில் விழுந்து விட்டால் ஒரு விதமான நச்சுப்பொருளை வெளியேற்றி விடுமாம். இதன் காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை, விஷத்தன்மை உடைய பூச்சி உணவில் விழுந்து விட்டால், அந்த உணவினை நீங்கள் சாப்பிட்டு விட்டால் தீவிர உடல் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

பல்லி விழுந்த உணவு விஷம் இல்லை

Lizard in food - பல்லி விழுந்தால் உணவு விஷமா?

“பல்லிகள் விழுந்த உணவுகள் எப்போதும் விஷம் கிடையாது. ஆரம்பத்திலிருந்தே பல்லிகள் பற்றி நம் மனநிலை அப்படி இருப்பதால் மன உளைச்சலில் வாந்தி வரலாம். ஒரு சில பல்லிகளின் உடலில் Salmonella என்ற கிருமி இருக்கும் அது பல்லிகள் மூலம், உணவில் கலந்துவிடலாம். அது மனிதர்களுக்கு தொற்றுகளை ஏற்படுத்தலாம். பல்லி விழுந்த உணவை உண்டு யாரும் உயிரிழந்ததாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை” 

நம்மில் சிலர் பல்லியை விரும்புவார்கள். ஆனால், பலரும் பல்லியைப் பார்த்தால் அருவருப்பு மற்றும் பயம் கொள்வார்கள். உங்கள் வீடுகளில் இருக்கும் பல்லிகள் விஷத்தன்மை உடையதாக இல்லை விஷத்தன்மை அற்றதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல்லிகள் உணவில் விழும் சமயத்தில், அவை சிறுநீர் அல்லது மலம் கழிக்க வாய்ப்புள்ளது.

இந்த சிறுநீர் மற்றும் மலம் நச்சுத்தன்மை அற்றதாக இருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும், பல நேரங்களில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுமாம். ஆனால், இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், பல்லிகள் உணவில் விழுவதால், அந்த உணவு விஷமாக மாறுவதில்லை.

வீட்டில் பல்லி விழுந்தால் உணவு விஷமாகாது. சாதாரண வீட்டுப் பல்லி விஷமானது அல்ல. ஆனால் இது சால்மோனெல்லா போன்ற கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் சுமந்து செல்கிறது. சால்மோனெல்லா மனிதர்களுக்கு டைபாய்டை உண்டாக்குகிறது. பாக்டீரியம் பெரும்பாலும் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரில் காணப்படுகிறது. தவிர, சுகாதாரமற்ற பல்லி விழுந்த உணவை சாப்பிடுவது மிகவும் மோசமானது.உண்மையில், இந்த உலகில் இரண்டு விஷ வகை பல்லிகள் மட்டுமே உள்ளன. ஒன்று கிலா அசுரன், மற்றொன்று மெக்சிகன் மணிகள் கொண்ட பல்லி. 

உணவைக் கெட்டுப் போகச் செய்யும் கிருமிகள்

இருப்பினும், பல்லி அதிகமாக கழிவறை போன்ற சுத்தமற்ற இடங்களில் இருந்து வருவதனால், அதனுடைய கால்களில் நம் கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் இருக்கின்றது. பல்லி உணவில் விழும்போது இந்த கிருமிகள், உணவில் கலந்து விடுவதால், உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதை அறியாமல் நாம் உணவை சாப்பிட்டு விடுவதால், இதுபோன்ற வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகிறது.

இதையும் படிக்கலாமே

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

பல்லி விழும் பலன்கள் 2023 – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top