தோலைப்  பொன் போல ஆக்கும் குப்பைமேனி – Kuppaimeni Leaves Benefits -Kuppaimeni uses in tamil

Kuppaimeni Leaves Benefits

Kuppaimeni Leaves Benefits – எந்தவித பராமரிப்பும் இன்றி, நம் வீட்டின் அருகில் வளரக்கூடிய தாவரங்களில் ஒன்றுதான் குப்பைமேனி. இதன் பெயர் என்னவோ குப்பைமேனி, ஆனால், நம் மேனி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்ககூடியது இந்த குப்பைமேனி.  பயிரிட தேவையில்லை. உரமிட தேவையில்லை. தானாக வளரும் இந்த குப்பைமேனியில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

குப்பைமேனியின் பயன்கள்…

Kuppaimeni Leaves Benefits
  • புண்களைக் குணமாக்கும்.
  • செரிமானக் கோளாறைச் சரி செய்யும்.
  • சர்க்கரை அளவைக் குறைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கொடிய விஷத்தை முறிக்கும்
  • தீக்காய எரிச்சலைக் குணமாக்கும்.
  • வாந்தியானது கட்டுக்குள் வரும்.
  • தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
  • குடல் புழுக்கள் வெளியேறும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்

குப்பைமேனியின் நன்மைகள்…

Kuppaimeni Leaves Benefits

ஒரு கைப்பிடியளவு குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து அவற்றை புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

மேலும், புண்களினால் ஏற்படக்கூடிய தழும்புகளையும் மறைக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டது இந்த குப்பைமேனி.

குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விட்டு அதனை அரைத்து, அந்த சாறை பருகினால் குடல் புண் மற்றும் செரிமான கோளாறு ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.

ஒரு கைப்பிடியளவு குப்பை மேனி இலைகளைப் பறித்து, நன்றாக கழுவி விட்டு , அதனை அரைக்கவும். பின்பு அதனை வடிகட்டி விட்டு அந்த இலை சாறைப் பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவானது குறையும்.

கொசுக்களால் ஏற்படக்கூடிய மலேரியா நோயையும் கூட இந்த குப்பைமேனி இலைச்சாறு குணமாக்கிவிடும்.

Kuppaimeni Leaves Benefits

குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விட்டு அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

குப்பைமேனி இலைச்சாறு கொடிய விஷத்தையையும் கூட முறிக்கக்கூடிய தன்மையைக் கொண்டது. கண்ணாடி விரியன் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய தன்மையைக் கொண்டது இந்த குப்பைமேனி.

குப்பைமேனி இலைகள் தோல் சார்ந்த நோய்களான சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது.

குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து, அதனை வீக்கத்தின் மீது தடவினால் வீக்கமானது குறையும். மேலும், வீக்கத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான வலியும் குறையும்.

குப்பைமேனி இலை சாறுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கீல்வாத நோய்க்கு பயன்படுத்தலாம்.

குப்பைமேனி இலையை நன்றாக நசுக்கி தீக்காயத்தின் மீது தடவினால் தீக்காய எரிச்சலானது குறையும்.

குப்பைமேனி இலையை அரைத்து, அத்துடன் மஞ்சள் கலந்து பூசினால் விஷ பூச்சிக் கடியானது குணமாகும்.

Kuppaimeni Leaves Benefits

குப்பைமேனி இலையின் சாறை தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலியானது குணமாகும்.

குப்பைமேனி இலையை அரைத்து பற்றுப் போட்டால் கண் வலி மற்றும் கண் தொற்று சரியாகும்.

குப்பைமேனி இலையை நன்றாக வதக்கி ஆறியவுடன், தலையில் வைத்து கட்டு போட்டால் தலைவலியானது குணமாகும்.

குப்பைமேனி இலைகளை அரைத்து காதில் தடவி வந்தால் காது வலியானது குணமாகும்.

குப்பைமேனி கஷாயம் குடித்தால் வாந்தியானது கட்டுக்குள் வரும்.

குப்பைமேனி இலைச்சாறுடன் பூண்டு சாறு கலந்து, 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும்.இந்த மருந்தை குழந்தைகள் 10 மில்லியும், பெரியோர்கள் 15-30 மில்லியும் பருகுவது நல்லது.

குப்பை மேனி இலைகளை அரைத்து, அத்துடன் உப்பு சேர்த்து சொறி மற்றும் தடிப்பின் மீது தடவினால் தோல் நோய்கள் சரியாகும்.

குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து அத்துடன், எலுமிச்சை சாறைக் கலந்து பூசி வந்தால் உடல் உஷ்ணமானது குறையும்.

Kuppaimeni Leaves Benefits

குப்பைமேனி இலை அழகு குறிப்புகள்

குப்பைமேனி இலைச்சாறுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சூடாக்கி, அவை , ஆறிய பிறகு சருமத்தில் பூச வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

குப்பைமேனி இலைச்சாறுடன் சுண்ணாம்பு சேர்த்து தோல் மீது தடவினாலும் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

குப்பைமேனி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.

குப்பைமேனி சாறுடன் சீரகம் மற்றும் மிளகு சேரத்து குடித்தால் சளியானது குணமாகும்.

குப்பைமேனி தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே

கீழாநெல்லியின் மருத்துவக்குணங்கள்-Keelanelli Benefits In Tamil

பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள் – Ponnanganni Keerai Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top