உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat…

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat...

வெயிலில் அலைவதாலும், நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வதாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்காத காரணத்தாலும் உடல் உஷ்ணம் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தால் தலை வலி, வயிற்று வலி, முடி உதிர்தல், தோல் வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது.

தண்ணீர்

தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக குடித்தாலே  உடல் உஷ்ணம் குறையும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து, அரைத்து கொள்ளவும். பின்னர், தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும்.

வெந்தயம்

வெந்தயத்தை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், வெந்தயத்தை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உடல் உஷ்ணம் குறையும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்து கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சீயக்காய் கொண்டு தலையை அலசினால் உடல் உஷ்ணம் குறையும்.

நல்லெண்ணெயில் பூண்டு மற்றும் மிளகைப் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், எண்ணெயை வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணெயைக் காலின் கட்டை விரலில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் உஷ்ணம் குறையும்.

இதையும் படிக்கலாமே

தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top