தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga
Dosham nivarthi aga-மக்கள் வளமான , அமைதியான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்காக பெரிதும் முயற்சி செய்கின்றனர். ஆனால், ஜாதகத்தில் அவர்களுக்கு உள்ள தோஷங்களால், மிகவும் அவதிப்படுகின்றனர். தோஷம் நிவர்த்தியாக செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள் பற்றி காண்போம்.
தோஷ வகைகள்
புத்திர தோஷம், பித்ரு தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் ,சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை ஆகும்.
பரிகாரத் தலங்கள் -Dosham nivarthi aga
தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்
புத்திர தோஷம்
புத்திர தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும். அங்கு கடலில் 21 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
பித்ரு தோஷம்
பித்ரு தோஷம் உள்ளவர்கள் காள அஸ்தி கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்குச் சென்று பித்ரு தோஷ பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.
மாங்கல்ய தோஷம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் சுமங்கலி ஏழு பேருக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும்.
செவ்வாய் தோஷம்
செவ்வாய் கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு, எலுமிச்சை பழத்தில் விளக்கு போட்டு வந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
ராகு, கேது தோஷம்
ராகு, கேது தோஷம் நிவர்த்தியாக காள அஸ்தி சென்று பரிகாரம் செய்தால், இந்த தோஷம் நிவர்த்தியாகும். மேலும், நாகர் சிலை வாங்கி, கோவிலில் வைத்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும்.
சூரிய தோஷம்
சிவன் கோயில்களில் இருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை, வெள்ளை ஆடை வைத்து வழிபட வேண்டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் இந்த பரிகாரம் செய்வது இரட்டிப்பு பலனைத் தரும்.
களத்திர தோஷம்
களத்திர தோஷம் நீங்க சுக்கிர பகவானை மனதார வேண்டினால் போதும். களத்திர தோஷம் நிவர்த்தியாகும். சுக்கிர பகவனால் நல்வாழ்வு அமைய சிறப்பு வழிபாடு செய்வது அவசியமாகும்.
இந்த பரிகாரங்களை முறையாக செய்தால், தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு வாழலாம்.
Pingback: முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera