நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam Pisin

badam pisin

Badam pisin-உடல் உஷ்ணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதுவும், இந்த கோடைக்காலம் என்றால் சொல்லவேத் தேவையில்லை. உடல் உஷ்ணத்தைக் குறைக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

badam pisin

எலுமிச்சைப் பழம் -1

பாதாம் பிசின் -1

தேன் – ஒரு தேக்கரண்டி

பாதாம் பிசின் செய்முறை

நாட்டு மருந்து கடைகளில் பாதாம் பிசினானது கிடைக்கும். பாதாம் பிசினை வாங்கி ஒரு துண்டை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் இரவு முழுக்க அதை அப்படியே வைக்க வேண்டும்.

மாறுநாள் காலையில் பாதாம் பிசின் ஜெல்லியைப்போல் இருக்கும்.  பாதாம் பிசின் ஜெல்லி உடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊாற்றி நன்றாக கலக்கவும்.

பின்னர், இதில் எலுமிச்சை சாறைப் பிழிந்துவிடவும். பின்னர், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நன்றாக கலக்கவும்.

பாதாம் பிசின் நன்மைகள்

இதனை பருகி வந்தால் உடல் உஷ்ணமானது உடனடியாக குறையும். இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே-

அர்ச்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள் -Archanai malargal

Share this post

1 thought on “நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam Pisin”

  1. Pingback: மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா…-valaiyal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top