அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள் – Arai Keerai Benefits

Arai keerai benefits

Arai Keerai Benefits-அரைக்கீரையில் எண்ணற்ற மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. பல தீராத நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. அரைக்கீரையில் தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் எண்ணற்ற உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம். அரைக்கீரையில் உள்ள மருத்துவக்குணத்தைப் பற்றிக் காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்திArai Keerai Benefits

அரை கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். நோய்கள் நம்மை எளிதில் தாக்க முடியாது உடலானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

உடல் வலிமைArai Keerai Benefits

அரை கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவு குணமாகும். உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கும். தாய்மார்கள் அரைக்கீரையைச் சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமையாகும். சோர்வு நீங்கும்.

புற்றுநோய்Arai Keerai Benefits

பலவகையான புற்றுநோய்களில் வயிற்றுப் புற்றுநோயும் ஒன்று. இந்த புற்றுநோய் வயிறு பகுதியினை மட்டும் தாக்கமால், அதனுடன் தொடர்பு உடைய குடல் பகுதி மற்றும் கணையம் போன்ற அணைத்து பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது. அரைக்கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள் அழிகிறது. வயி்ற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது.

வயிறு புண்Arai Keerai Benefits

அரைக்கீரையைச் சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் குணமாகிறது. வயிறு சார்ந்த பிரச்சனைகளைக்  குணப்படுத்துகிறது. வயிறை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மலச்சிக்கல்Arai Keerai Benefits

அரைக்கீரையைச் சாப்பிட்டு வருவதன் செரிமானம் சார்ந்த கோளாறுகள் முழுவதுமாக நீங்கும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும். மலம் இறுகுவதைத் தடுக்கும். குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

 கருப்பை வலிமை அடையArai Keerai Benefits

அரைக்கீரையைப் பக்குவம் செய்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால், கருப்பை வலிமை அடையும். கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும். குழந்தைப்பேறு கிடைக்கும்.

உடல் குளிர்ச்சிArai Keerai Benefits

Arai keerai benefits

அரைக்கீரையைச் சாப்பிட்டு வருவதன் உடலானது குளிர்ச்சி பெறும். உடல் உஷ்ணம் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், வலிமையோடும் இருக்கும்.

மஞ்சள் காமாலை நோய்Arai Keerai Benefits

மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சார்ந்த பிரச்சனை குணமாகும். நச்சுகள் வெளியேறும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

சிறுநீரகக் கோளாறுArai Keerai Benefits

அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்களில் உருவாகி இருக்கும் கற்கள் கரையும். நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும். சிறுநீரகம் நன்றாக செயல்படும்.

இதையும் படிக்கலாமே-

  1. சிறுகீரையின் மருத்துவக்குணங்கள் -Sirukeerai Benefits
Share this post

2 thoughts on “அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள் – Arai Keerai Benefits”

  1. Pingback: பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள்… -ponnanganni keerai benefits

  2. Pingback: மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top